திருமணமான – திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு !
*🧕🧕🧕 மகளிர் மருத்துவம் 🧕🧕🧕*
1. வெள்ளைபடுதல் – அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.
2. பிறப்புறுப்பில் புண் – மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்
3. சீரற்ற மாதவிலக்கு – அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.
4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி – முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.
5. உடல் நாற்றம் – ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.
திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.
1. கர்ப்பகால வாந்தி – அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.
2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் – வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.
3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு – சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.
4. தாய்ப்பால் பற்றாக்குறை – பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.
5 #பெண்களின் வயிற்று சதை குறைய:
சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
6
மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்
*குழந்தை இல்லையா?...*
இனி கவலை வேண்டாம்... கரு உற்பத்தியைத் தூண்டும் பூவரசம்பூ.
அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூவை அரைத்தெடுத்து சருமத்தில் பூசிவர, தோல் வெடிப்பு நீங்கி சருமம் பளபளக்கும்.
பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து, பித்த வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு, மூலநோய் இவற்றுக்கு வெளிப்புறமாகத் தடவிவர விரைவில் குணமாகும்.
கிராமப்புறங்களில் கருப்பைப் பிணிகளைச் சரிப்படுத்தவும் கரு உற்பத்திக்கும் (குழந்தைப் பேற்றுக்கும்) இதன் பூவைக் காலையில் வெறும் வயிற்றில் துவையலாக அரைத்து சாப்பிடுகிறார்கள்.
பூவரசு பூ - இலையை நன்றாக அரைத்து, மோரில் கலந்து பெண்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுப்பார்கள்.
காரணம், பூ மற்றும் இலையில் உள்ள ரசாயனப் பொருட்கள் (தெஸ்பிசின், லூப்பினால், கிளைக்கோசைட்ஸ்) கருப்பையைப் பலப்படுத்தி, கருமுட்டை உற்பத்தியைத் தூண்டும்.
*ஆண்கள் பெண்களுக்கான மார்பக பிரச்சினை*
பெண்களின் பெரிய மார்பக வளர்ச்சி
பெண்களுக்கு அளவுக்கதிகமான பெரிய பருத்த மார்பகங்கள் அழகைக் குறைத்து மன வேதனையைத் தரும் பிரச்சினைக்குத் தீர்வு தெரியாமல் வருந்துவர்
அவற்றை அவர்களின் உடல் வாகுக்கேற்றவாறு இயல்பான நார்மல் நிலைக்குக் கொண்டு வரவும் சுருங்கி முன் போன்ற அழகான மார்பகங்களைப் பெறவும்
ஹார்மோன் பிரச்சினையால் ஆண்களின் மார்புப் பகுதியில் மார்பகம் போன்ற வீக்கம் வளர்ச்சியைக் கட்டுப் படுத்தி சரி செய்து ஆண்களின் மார்பு போன்று திரும்பப் பெறவும் உதவும் மருந்து
மாதுளை பழத் தோல் தூள் செய்தது .......... இரண்டு தேக்கரண்டி
பீர்க்ககங்க்காய் அரைத்த விழுது ......... இரண்டு தேக்கரண்டி
கடுக்க்காயத் தோல் பொடி ........... இரண்டு தேக்கரண்டி
விளக்கெண்ணெய் ........ தேவையான அளவு
ஆகிய பொருட்களை ஒன்றாக சேர்த்துக் கலந்து பசை போலாக்கி
தினமும் இரவு அல்லது உங்களுக்கு வாய்ப்பான நேரங்களில் மார்பில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி அல்லது மறுநாள் காலையில் குளித்து வர பெண்கள் பருத்த மார்பகங்கள் சுருங்கி அழகான மார்பகங்களைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்
ஆண்கள் தேவையற்ற மார்பக வீக்கங்கள் கரைந்து ஆண்கள் போன்ற மார்பைப் பெறலாம்
*குறிப்பு*
கண்டிப்பாக விளக்கெண்ணெய் தவிர வேறு எண்ணெய் பயன்படுத்தக் கூடாது
மருந்து கண்டிப்பாக ஒருமணி நேரமாவது பூசி அப்படியே வைத்திருக்க வேண்டும்
அப்போதுதான் *எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்*
*மாதவிலக்கு பிரச்சனைகள் தீர சில இயற்கை வைத்தியங்கள்..!!*
100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்துத் தூளாக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மாதவிலக்கு பிரச்னைகள் நீங்கும்.
புதினாக் கீரையை வெயிலில் உலர்த்தி உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டு நாள்தோறும் மூன்றுவேலை அரைத் தேக்கரண்டித் தூளுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு காலக்கணக்குபடி சரியான நாட்களில் வெளியேறும்.
20கிராம் கருஞ்சீரகத்தை மணல் சட்டியில் போட்டு வறுத்துத் தூள் செய்து 40 கிராம் பனை வெல்லத்துடன் கலந்து, 4 வேளைக்கு காலை, மாலை என பாலுடன் கலந்து குடித்து வர மாதவிலக்கு சிக்கல் மறையும்.
சிலருக்கு மாதவிலக்கு சரியாக ஆகாமல் விட்டுவிட்டு வந்தால், இவர்கள் நாள் தோறும் காலையில் செம்பருத்திப் பூவில் நான்கு, சிறிதளவு அறுகம்புல் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு பகலில் மோர் சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட்டு வர குணமாகும்.
சிவப்பு நிறங்கொண்ட துளசி இலையைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து மாதவிலக்கின் போது நான்கு நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர மாதவிலக்கு குறைகள் நீங்கும்.
மாங்காயின் தோலை நெய்யில் வறுத்து சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டாலும் மாதவிலக்கு சீர்படும்.
கோதுமைக் கஞ்சியை மாதவிலக்கு காலங்களில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக நிகழும். உடல் பலம் பெறும். சிக்கலில்லாத சீரான மாதவிலக்கு ஏற்படவும் கோதுமைக் கஞ்சி உதவும்.
மாதவிலக்கு ஒழுங்கான இடைவெளியில் வராத பெண்களுக்கு திராட்சைச் சாறு நல்ல தீர்வு.