Skip to main content

இந்த ஒரு பொருள் சாப்பிட்டு முடிச்சதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?




வறுத்த மக்காச் சோளம் அல்லது பூட்டா அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகவும் இருக்கிறது. இருப்பினும், இதை உண்டவுடன் குடிநீரை உடனடியாக குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுமாம்.

நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இரைப்பைப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலிக்கும் இது வழிவகுக்கும்.

ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது?

தண்ணீருடன் மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒன்றாக உட்கொள்ளும் போது ​பலர் வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாக புகார் செய்துள்ளனர்.

சோளக்கருது உண்டவுடன் குடிநீரை குடிப்பதன் மூலம் ஜீரண நொதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றமடைகின்றன எனவே செரிமான வேகம் குறைகிறது.

சோளக்கருதில் உள்ள சிக்கலான கார்ப்ஸ் , ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம்.

இதனால் வாய்வு , அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உருவாகும் என டாக்டர் அஷுடோஷ் கூறுகிறார்.

எவ்வளவு நுரம் கழித்து குடிக்கலாம்?

சிறந்த நேர இடைவெளி, குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தவிர, எலுமிச்சை சாறு பூசப்பட்ட மக்காச் சோளம் அல்லது சோளக்கருதைத் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் எலுமிச்சை செரிமானத்தை எளிதாக்கும் மற்றும் ஒட்டுமொத்த செரிமானச் செயல்முறையையும் மென்மையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும்.

மழைக்காலத்தில் பருவத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். வறுத்த மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒரு சுவையான தெரு உணவாக இருந்தாலும், புதிய மற்றும் சூடானதை மட்டும் நுகருங்கள்.

இதில் அதிகபட்ச ஊட்டச்சத்து நன்மைகளைப் பெறுவதற்காக, உடனடியாக அதை உட்கொள்வது நல்லது . நீண்ட காலமாக அதை சேமித்து வைத்து உபயோகித்தல் பாக்டீரியாத் தொற்றுக்களால் வயிறு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

எனவே, அடுத்த முறை மழைக்காலத்தின் மகிழ்ச்சியை சுவையான இந்த மக்காச் சோளம் அல்லது சோளக்கருதைக் கொண்டு கொண்டாடும் தருவாயில் மேலே குறிப்பிடப்பட்ட விஷயங்களை மனதில் வைத்து வயிற்று அசௌகரியத்தில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும்...

tamil melody songs mp3 - list

Yarum illatha thivu onru vendum vendum மகராணி மகராணி மன்மத மகராணி மண்குடிசை தேடிவந்த , சோறு கொண்டு போறபுள்ள இந்த சும்மாடு , அன்பே நீ என்ன கண்ணனோ கள்வனோ ? மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா நினைத்தது யாரே நீ தானே . மல்லிகையே மல்லிகையே தூதாக போ ! நினைக்காத நேரமில்லை உன்னை ... நினைக்காத .! காதல் ஒவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் ..! பொன் மாலையில் தமிழ் கீதம் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம்