ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது.
இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது.
மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.