எல்லாருக்கும் கடலை மாவு என்றாலே முகம் பளபளக்கும் சருமத்திற்கும் தான் என்று தெரியும். ஆனால் இந்த கடலை மாவை கொண்டு தலைமுடி வளர்ச்சியை தூண்டலாம்.
பயன்கள்
சரும அழகைப் போலவே தலைமுடி பராமரிப்பிலும் கடலைமாவு பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்து கடலை மாவு அழகு பராமரிப்புக்கு என்றே பயன்பட்டு வருகிறது.
இதிலுள்ள போஷாக்குகள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வலிமையான மற்றும் அடர்த்தியான பொலிவான கூந்தலை பரிசாக அளிக்கிறது.
- முடி வளர்ச்சி
- முடி உதிர்தலை தடுத்தல்
- கூந்தலை சுத்தமாக்குதல்
- கூந்தல் வறட்சியை போக்குதல்
- கூந்தலிலுள்ள சிக்கலை போக்குதல்
- இயற்கையான கண்டிஷனர்
- பொடுகை தவிர்த்தல்
- பொலிவான மற்றும் நீண்ட கூந்தலை அளித்தல்
- கூந்தல் நுனிப்பிளவை தடுத்தல்
- ஆகிய பிரச்சினைகளுக்கு கடலை மாவு மூலம் உங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.