Skip to main content

Posts

Showing posts from July, 2018

ஒரு பெண் நடு இரவில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!

ஒரு பெண் நடு இரவில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!. வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே? மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்) கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’ -வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.

”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன். ”தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”… -ஒரு மாணவி. ”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது. செயல் ஒன்றுதான்… எத்தனை எத்தனை பார்வை. எத்தனை எத்தனை கண்ணோ

விசர் நாய் கடி – ஓர் உண்மை சம்பவம்(மட்டக்களப்பு)

இப்பதிவு எனது மருத்துவன்  நண்பனுடன் உரையாடும் போது கிடைத்த அனுபவ பகிர்வாகும். மட்டக்களப்பில் தெரு ஒன்றில் பிச்சையெடுத்து வாழும்  50 வயது குடும்பத்துப்பெண் மூச்செடுப்பதில் கஷ்டம், கழுத்து மற்றும் நெஞ்சு இருகிக் கொள்கிறது என்று காலை நேரம் எங்கள் வாட்டில் அனுமதிக்கப்பட்டாள். கண்களை அகலத் திறந்தவளாக அவசர அவசரமாக ஆழமற்ற மூச்சுக்களை எடுத்தவளாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். ஆரம்பச் சோதனையில் என்ன நிலைமை என்பதை ஊகிக்க முடியவில்லை. மாலையாகும் போது அவளின் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே போனது. மூச்சு விடுவதில் கஷ்டம் அதிகரிக்க, எதையுமே உண்ண முடியாது, குடிக்க முடியாது என்றாகி விட்டது. சிறு புத்தகத்தை விசிறும் போது வருகிற சிறு காற்றுக்குக் கூட மிக எரிச்சலடைந்து (irritable) பதறுபவளாக இருந்தாள். நீரை வாய்க்கெடுத்து மிகக் கஷ்டத்தோடு விழுங்கி உடனே மூச்செடுக்க முடியாமல் வாந்தியெடுத்தவள் நேரஞ் செல்லச்செல்ல நீரை வாய்க்கெடுக்கவும் மறுத்தாள். (இப்போது நிலைமை இது தான் என்பதை ஊகித்துக் கோண்டோம்) இரவாகும் போது நிலைமை மிகமிக மோசமானது. ஜன்னலூடாக வருகிற காற்றுக்கு துடித்து விடுவாள், நீரைக் காணும் போதே உதறிவிட்டு

கன்னியா வென்னீர் ஊற்றின் அருகில் உள்ள மலையில் காணப்படும் இராவணனின் தாய் கைகேசியின் கல்லறையே இது.

தனது தாயின் ஈமக் கிரியைகளை நிறைவு செய்வதற்காக இராவணன் ஏழு வென்னீர் ஊற்றுக்களை இவ்விடத்தில் உருவாக்கி கிரியைகளை நிறைவு செய்த பின் இவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான் என இந்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது 60 அடி சமாதி என அழைக்கப் படுகிறது. தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.  இராவணனின் தலைநகர் அருகிலுள்ள திரிகூட மலையில் (திருக்கோணமலை) அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இராவணனின் பாட்டி ஆவிர்பூ கன்னியாக இருந்த போது இவ்விடத்தில் தான் புலத்திய முனிவரைக் கண்டதாகத் தெரிய வருகிறது. அகத்திய முனிவர் இவ்விடத்தில் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டதாக குறிப்புகள் கூறுகின்றன. இத்தனை பாரம்பரியமிக்க நமது கன்னியா நம் கையை விட்டுப் போய் விட்டதாக பலர் கவலையடைகின்றனர். ஆனால் இந்த நிலைமைக்கு தமிழர்களின் உதாசீனப் போக்குதான் காரணமாகிறது. இந்த கால கட்டத்தில் இங்கு ஓர் பெரிய சிவன் கோயிலை ஏன் கட்டவில்லை???? அகத்தியர், ஆவிர்பூ, கைகேசி, இராவணன் ஆகியோருடன் தொடர்புடைய கன்னியாவை தமிழர்கள் கவனிக்காமல் விட்டது ஏன்?????? இங்கு ஒரு கோயிலைக் கட்டியிர