தனது தாயின் ஈமக் கிரியைகளை நிறைவு செய்வதற்காக இராவணன் ஏழு வென்னீர் ஊற்றுக்களை இவ்விடத்தில் உருவாக்கி கிரியைகளை நிறைவு செய்த பின் இவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான் என இந்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது 60 அடி சமாதி என அழைக்கப் படுகிறது. தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
இராவணனின் தலைநகர் அருகிலுள்ள திரிகூட மலையில் (திருக்கோணமலை) அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராவணனின் பாட்டி ஆவிர்பூ கன்னியாக இருந்த போது இவ்விடத்தில் தான் புலத்திய முனிவரைக் கண்டதாகத் தெரிய வருகிறது. அகத்திய முனிவர் இவ்விடத்தில் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டதாக குறிப்புகள் கூறுகின்றன.
இத்தனை பாரம்பரியமிக்க நமது கன்னியா நம் கையை விட்டுப் போய் விட்டதாக பலர் கவலையடைகின்றனர். ஆனால் இந்த நிலைமைக்கு தமிழர்களின் உதாசீனப் போக்குதான் காரணமாகிறது.
இந்த கால கட்டத்தில் இங்கு ஓர் பெரிய சிவன் கோயிலை ஏன் கட்டவில்லை???? அகத்தியர், ஆவிர்பூ, கைகேசி, இராவணன் ஆகியோருடன் தொடர்புடைய கன்னியாவை தமிழர்கள் கவனிக்காமல் விட்டது ஏன்??????
இங்கு ஒரு கோயிலைக் கட்டியிருந்தால் எத்தனை புத்தர் சிலைகள் வைத்தாலும் எம் கோயில் அப்படியே இருந்திருக்கும். யாராலும் அதை உடைக்க முடியாது. எமது அடையாளம் காப்பாற்றப் பட்டிருக்கும்.
ஆனால் இப்போது இந்துக்களின் அடையாளம் எதுவும் அங்கே இல்லை.திருக்கோணேஸ்வரத்திற்கு நாம் கொடுத்த முக்கியத்தில் பாதியாவது கன்னியாவிற்கு கொடுத்திருக்கலாம் அல்லவா,
ஏன் கொடுக்கவில்லை???
இது போல நூற்றுக்கணக்கான எம் பாரம்பரிய வழிபாட்டிடங்கள் உள்ளன. இவற்றை நாம் கண்டு கொள்ளாமல் இனிமேலும் தூங்கிக் கொண்டிருந்தால் ….
கன்னியா, கச்சகொடிமலை, பச்சனூர்மலை, சாம்பல்தீவு, மாணிக்கமடு என பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நான் சிறுவயதுமுதற்கொண்டு கன்னியாவிற்கு எத்தனையோதரம் சென்றுள்ளேன். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மலைக்கு இரண்டு மூன்றுதரம் சென்றிருக்கின்றேன்.
இதனை நாங்கள் ‘கபிறடி மலை’ என்றுதான் கூறுவது.
அங்கு நாற்பது முழமனிதனை தாட்டதாகவும் அவருக்கு அருகில் அவருடைய ஐந்து அடிக்குருவி தாக்கப்பட்டதாகவுமே பலர் சொல்ல அறிந்திந்தேன்.
எனது நண்பர்கள் நான் ‘கபிறடி மலை’க்கு சென்றுவந்ததை அறிந்து அந்த இடங்களுக்கு போவதை தவிர்க்கவேண்டும் என்றும் கூறினார்.
மேலும் அவர் கன்னியாக்காட்டினுள் ‘திகைப்பூண்டு” என்ற ஒரு மூலிகை இருப்பதாகவும் அதை தவறி யாராவது மிதித்துவிட்டால் வழிதெரியாது காட்டினுள் சிக்குண்டு அலைவார்கள் என்றும் அப்படிப்பட்டவர்கள் இரண்டு மூன்றுபேர் அனுராதபுரக்காட்டில் அலைந்து திரிந்து பத்துப்பன்னிரண்டு நாட்களின்பின் அனுராதபுரத்தை அடைந்தார்கள் என்றும் கூறினார்.
- நன்றி சித்தர்களின் குரல்*