Skip to main content

Posts

Showing posts from April, 2014

மாயமான விமானம் ஆப்கானிற்கு கடத்தல்-239 பயணிகள் உயிருடன் உள்ளனர்: ரஷ்யா உளவுத் துறை தகவல்

ரஷ்ய உளவுத் துறையினர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மலேசிய விமானம் தீவிரவாதிகளால் திசை திருப்பப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் எல்லையோரம் ஆப்கானிஸ்தான் பகுதியில் மலை பகுதிகள் நிறைந்த இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அங்கு விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன.  பயணிகள் அனைவரையும் 7 குழுக்களாக பிரித்து வேறு வேறு இடங்களில் அடைத்து வைத்துள்ளனர். மண் குடிசைகளில் எந்த தொலைதொடர்பு வசதியும் இல்லாத இடத்தில் பயணிகளை தீவிரவாதிகள் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் விமானத்தில் சென்றவர்களில் ஆசிய நாடுகளை சேர்ந்த பல்துறை நிபுணர்கள் 20 பேரை பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக அடைத்துள்ளனர்.  இவ்வாறு ரஷ்ய உளவு துறையினர் தெரிவித்துள்ளதாக டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விமானம் மாயமாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகும் நிலையில், விமான பயணிகள் உயிருடன் இருப்பதாக ரஷ்ய உளவு துறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலியாணம் என்பது ஒரு சிறைச்சாலை.

அதில் கணவன் என்பவன் ஆயுள் கைதி,  மனைவி என்பவள் , சிறை அதிகரி போல, பிள்ளைகுட்டிகள் நமது குற்றங்கள் போல, சொந்த பந்தங்கள் அனைவரும் சக கைதிகள் போல . மாமியார் என்பவர் உயர் அதிகரி போல , எல்லத்தியும் மகளுக்கு போட்டு குடுக்குறதால. மாமனார் என்பவர் தூக்கு கைதி , மச்சினிச்சி இருந்தால் அவதான் நமக்கு கிடைக்கும் ஒரே ஒரு பரோல் . மச்சினன் இருந்த . ஜாமீன் எடுக்க வராத துரோகி . ஜெயிலில் கஷ்ட பட கஷ்ட பட இதுக்கு தூக்கே பரவால்ல நு தோணும் இதெல்லாம் தேவையா ? இந்த பொழப்புக்கு பேசாம மொட்ட மாடில மல்லாக்க படுத்துட்டு வானத்துல இருக்குற நட்சத்திரத்த என்னலாம் . கல்யாண லைப் கு இது எவ்ளோவோ பெட்டர் ..... சண்டைக்கு வரும் தாய்குலங்கள் , தக்காளி , முட்டை இவைகளை தவிர்த்து அஹிம்சை முறையில் பேசுவதானால் பேசலாம்....

பிரான்சில் கயிற்றின் மேல் நடந்து நதியை கடந்த வினோத மனிதர்

பிரான்சில் நபர் ஒருவர் கயிற்றின் மேல் நடந்து நதியை கடந்த சம்பவம் பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மாகாணத்தில் உள்ள செயின் நதியின் மேல் நேற்று முன் தினம், டென்னிஸ் ஜொசலின் என்ற கலைக்கூத்தாடி, கயிறை கட்டி நடந்துள்ளார். <iframe width="1280" height="720" src="//www.youtube.com/embed/zF6scNLIrAM" frameborder="0" allowfullscreen></iframe> பிரான்சில் நபர் ஒருவர் கயிற்றின் மேல் நடந்து நதியை கடந்த சம்பவம் பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மாகாணத்தில் உள்ள செயின் நதியின் மேல் நேற்று முன் தினம், டென்னிஸ் ஜொசலின் என்ற கலைக்கூத்தாடி, கயிறை கட்டி நடந்துள்ளார்.