Skip to main content

Posts

Showing posts from March, 2014

கடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்? மாயமான மலேசிய விமானம்... பைலட்டின் திகில் பின்னணி

[ விகடன் ] மலேசிய விமானம் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை அந்த விமானம் பற்றி முழுமையான எந்த விவரங்களும் வந்தபாடில்லை.  இந்தியப் பெருங்கடலில் அந்த விமானத்தின் உதிரி பாகம் ஒன்று தென்படுவதாக 19-ம் தேதி ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்தடுத்து அதிர்வுகள் கிடைத்தபடி இருக்கின்றன! மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்குக்கு கடந்த மார்ச் 8-ம் தேதியன்று அதிகாலை நேரத்தில் கிளம்பிச்சென்றது போயிங் விமானம். சீனக் கடலுக்கு மேலே வியட்நாம் அருகே உள்ள ஒரு தீவுக்கு அருகில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென மாயமானது.  இந்த விமானத்தில் 239 பேர் இருந்தனர். இவர்களில் 153 பேர் சீனர்கள். ஐந்து பேர் இந்தியர்கள். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்.  விமானத்தைத் தேடும் பணியில் சீனா அதிக தீவிரம்காட்டுகிறது.  இந்த நிலையில், மாயமான விமானத்தின் தலைமை பைலட் ஜகாரி அகமது ஷா-வின் மர்மப் பின்னணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அவருடைய வயது 53. விமானப் பணியில் 30 வருட சர்வீஸ் கொண்டவர் அவர். ஐ.நா. கண்காணிப்பு அமைப்பினர், 'அணுகுண்டு வெடிப்பு மற்றும் பூகம்பங்கள

பெர்முடா முக்கோணப் பகுதியில் மலேசிய விமானம்! பயணிகள் பத்திரமாக உள்ளனர்

ஒரு பெரிய அழிவு, இயற்கை சீற்றங்கள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும்போது அது தொடர்பான தகவல்களை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர். இன்றைய காலத்தில் தான் கைக்குள் உலகத்தை அடக்கி விடலாமே… ஒரு நொடியில் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதை தவறாக பயன்படுத்துவதற்கு என்றே, ஒரு கூட்டம் இருக்கிறது. கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமான மலேசிய விமானம் பற்றி தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதற்கு நடுவே பீதியை கிளப்பும் விதத்தில் பொய்த் தகவல்களும் பரப்பப்படுகின்றன. ‘‘பெர்முடா முக்கோணப் பகுதியில் மலேசிய விமானம் விழுந்துகிடக்கிறது. எனினும் பயணிகள் பத்திரமாக உள்ளனர். இந்த வீடியோவைப் பாருங்கள்” என்ற பதிவை பேஸ்புக்கில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். வழக்கம்போன்று மால்வேர் எனப்படும் கணனிகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய மென்பொருள்களை உருவாக்கிப் பரப்பும் ஹேக்கர்களின் வேலைதான் இது. அதுவும் இந்த வீடியோவை பிபிசி, சிஎன்என் போன்ற செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதாகக் கூறி அந்த வதந்தியின் ‘நம்பகத் தன்மையைக்’ கூட்ட ஹேக்கர்கள் முயல்கின்றனர். கூடவே, ‘Breaking News', 'Shocki

239 பயணிகளில் ஒருவராக பயணித்த விமான என்ஜினீயர் – மாயமான விமானம் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த 8ம் தேதி புறப்பட்ட மலேசிய  விமானம், நடுவானில் மாயமானது. மாயமான விமானம் பற்றி எந்த தகவலும் இல்லை. தொழில் நுட்பம் வளர்ந்த நிலையிலும் அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம் என்ற அளவில் ஊகச் செய்திகள் உலா வருகிறதே தவிர உருப்படியான துப்பு எதுவும் இதுவரை கிட்டவில்லை. ஆஸ்திரேலியா – 6 ஆஸ்திரியா – 1 கனடா – 2 சீன மக்கள் குடியரசு – 153 பிரான்ஸ் – 4 ஹாங்காங் – 1 இந்தியா – 5 இந்தோனேசியா – 7 இத்தாலி – 1 மலேசியா – 38 +12 பணிக் குழுவினர் நெதர்லாந்து – 1 நியூசிலாந்து – 2 ரஷ்யா – 1 உக்ரைன் – 2 ஐக்கிய அமெரிக்கா – 3 மொத்தம் (15 நாட்டினர்) 239 - இந்த 239 பேரின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், தெற்கு சீன கடல் பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. அங்கு கிடைக்காததால், மலாக்கா கடல், இந்திய பெருங்கடல், அந்தமான் கடல் பகுதியில் தேடப்பட்டது. எங்குமே விமானம் பற்றிய எந்த த

என் தாத்தா அவர் காலேஜ் படிக்கும்போதே தன் காதலிக்கு மிஸ்டு கால் கொடுப்பாராம்..!

என் தாத்தா அவர் காலேஜ் படிக்கும்போதே தன் காதலிக்கு மிஸ்டு கால் கொடுப்பாராம்..! - லேண்ட் லைனிலயா? . . . .. ..இல்லே..அவங்க வீட்டு ‘காலிங் பெல்லை’ அடிச்சுட்டு ஓரமா ஒளிஞ்சுப்பாராம்…!

இதுதான் அஞ்சான் கதை!

லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முதன் முறையாக இயக்குனர் லிங்குசாமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிவடைந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இறுதி கட்ட படப்பிடிப்பு கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் நியூசிலாந்தில் நடக்க இருக்கிறது. சமந்தா இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்து வருகிறார். லிங்குசாமியின் வட்டாரத்திலிருந்து கசிந்த வரையில் படத்தின் கதையாக, சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான சூர்யா, மும்பையில் நடக்கும் ஒரு கருத்தரங்கிற்காக செல்கிறார். மும்பையில் தன் கண்முன்னால் நடக்கும் ஒரு தவறை தட்டிக் கேட்கிறார். அது சின்ன தவறுதான். ஆனால் அதற்கு பின்னால் மும்பையின் அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் இருக்கிறார்கள். தன் வேலையை முடித்து விட்டு சூர்யா சென்னை வந்து விடுகிறார். வந்த உடனேயே அவரது வேலை பறிக்கப்படுகிறது. அவருக்கும், அவரது குடும்பத்துக்கும், காதலிக்கும் முகம் தெரியாத மனிதர்களால் அச்சுறுத்தலும், பிரச்னைகளும் வருகிறது. அவை எல்லாமே மும்ப

பொடுகை போக்கும் வழிகள்

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக, செதில் செதிலாக உதிரும். இதை தான் நாம் "பொடுகு" என்கிறோம். பொடுகு ஏன் வருகிறது? 1.  வரட்சியான சருமத்தினால் வரும். 2.  அவசரமாக தலைக்கு குளிப்பது. நன்றாக தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர், சோப்பு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும். 3.  எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது. 4.  ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி, அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும். 5.  “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம். 6.  எக்ஸீமா, சொறாஸிஸ் போன்ற தோல் நோய்களாலும் பொடுகு வரலாம். 7.  அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். கண்ட கண்ட "ஜெல்"களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம். 8.  மனஅழுத்தம், கவலையாலும் இது வரலாம். பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? 1.  ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, துண்டு ப

மார்ச் 8.. உழைக்கும் மகளிர் தினம் - செய்தி-1 ஆண்களின் சிந்தனைக்கு..

நாங்கள் ள் நாய்களைவிட கேவலமானவர்களா ?? அசாமில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக போராடிய  லக்ஷ்மி ஓரான் என்கிறபெண்ணை அம்மணமாக்கி அடித்து உதைத்துவிரட்டி அடித்தனர் சாதி வெறி பிடித்த இந்துக்கள் ..!! “சாதி இந்துக்களால் அம்மணமாக்கி அவமானம் படுத்தப்பட்டு வீதி வீதியாக அடித்து விரட்டப்பட்டு மேல் சாதி வெறியர்கள் ஒருவர் விடாமல் உதைத்து சாதி வெறிக்கு இரையான லக்ஷ்மி ஓரான் சொன்னது இது தான் … “நான் மிகுந்த அவமானத்தில் இருக்கிறேன் இந்த அவமானத்தை என்னால் என் வாழ்கையின் எந்த காலகட்டத்திலும் மறக்கவே முடியாது …ஆதிவாசிகள் உரிமைகளை கேட்பது தவறா .. ?? மனிதர்களாக மதிக்கப்படவேண்டும் என்று விரும்பியது தவறா .. ?? வீதியில் நாய்கள் நுழைந்தால் கூட ஒன்றும் செய்யாத மேல் சாதியினர் நாங்கள் நடந்ததும் எங்களை கேவலமாக அடித்து விரட்டுவது ஏன் ?? நாங்கள் நாய்களைவிட கேவலமானவர்களா ??” “நான் தற்கொலை செய்துகொள்ள யோசிக்காத இரவே இல்லை… ஆனால் என்னை நம்பித்தான் என் குடும்பம் இருக்கிறது.. அந்த குடும்பம் எப்போதும் போல வறுமையில் தான் இருக்கிறது … அதை காப்பாற்றத்தான் நான் அவமானத்தை மறந்து வருமானத்திற்க்காக இன்று செக்யுரிட்டி வேலை பார்கிறேன்

பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும்

                              ‘பெண்கள் நம் நாட்டின் கண்கள்’, ‘பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும்’. இந்த முழக்கங்களை நாம் மேடைகளில் கேட்கலாம். ஏன் இந்த முழக்கங்கள்? ஏன் ஆண்களை நாட்டின் கண்கள் என சொல்லவில்லை? ஏன் பெண்ணாய் பிறக்க மாதவம் செய்தல் வேண்டும் என்கிறோம்? இம் முழக்கங்கள் பெண் இழிவானவள், அவள் ஆணுக்கு  அடிமை என்றெண்ணும் சமூகத்தில் இருந்து வந்தவை. ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படும் இடத்தில் இம்முழக்கங்கள் தேவையே இல்லை.                    ஒரு வீட்டில் கணவன் வெளியே சென்று பணம் ஈட்டி வருகிறான். மனைவி வீட்டுக்குள் இருந்து வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறாள். இது வேலைப் பகிர்வுதானே அன்றி பெண் அடிமைத்தனம் இல்லை என்று கூறலாம். கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் பெண் எவ்வளவு அடிமைபட்டுக்கிடக்கிறாள் என்று தெரியும்.                                            கணவனின் வேலை நேரம் அதிகபட்சம் எட்டு மணி நேரம்.பெண்ணின் வேலை நேரம் நாள் முழுவதும் நடுவில் சில நாடகத் தொடர்கள் பார்க்கிறாள். நன்றாக கவனித்தால் பெண்கள் படங்கள் பார்ப்பதை விட தொடர்கள் பார்பதையே விரும்புகின்றனர் என்பது  தெரிய

அஸ்தமிக்கப் போகின்றதா பேஸ்புக்?

உலகின் முதற்தர சமூகவலைத்தளமான பேஸ்புக் தனது மின்னஞ்சல் சேவையினை முற்றாக நிறுத்தவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் விண்டோஸ் மெசஞ்சர் சேவையினையும் எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதியிலிருந்து நிறுத்தவுள்ளதாக அந்நிறுவனம் மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான அப்பிளிக்கேஷனையும் இணையத்தளத்திலிருந்து நீக்கவுள்ளது. எனினும் இச்சேவையை நிறுவத்துவதற்கான காரணத்தை பேஸ்புக் இதுவரை வெளியிடவில்லை. அண்மையில் “வாட்ஸ் அப்” இனை முழுமையாக வாங்கிய பேஸ்புக் நிறுவனம் அதனை பிரபல்யப்படுத்தும் பொருட்டே தனது விண்டோஸ் மெசஞ்சர் சேவையினை நிறுத்துவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகின்றனர்.