ஒரு பெரிய அழிவு, இயற்கை சீற்றங்கள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும்போது அது தொடர்பான தகவல்களை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர். இன்றைய காலத்தில் தான் கைக்குள் உலகத்தை அடக்கி விடலாமே… ஒரு நொடியில் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதை தவறாக பயன்படுத்துவதற்கு என்றே, ஒரு கூட்டம் இருக்கிறது. கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமான மலேசிய விமானம் பற்றி தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதற்கு நடுவே பீதியை கிளப்பும் விதத்தில் பொய்த் தகவல்களும் பரப்பப்படுகின்றன. ‘‘பெர்முடா முக்கோணப் பகுதியில் மலேசிய விமானம் விழுந்துகிடக்கிறது. எனினும் பயணிகள் பத்திரமாக உள்ளனர். இந்த வீடியோவைப் பாருங்கள்” என்ற பதிவை பேஸ்புக்கில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். வழக்கம்போன்று மால்வேர் எனப்படும் கணனிகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய மென்பொருள்களை உருவாக்கிப் பரப்பும் ஹேக்கர்களின் வேலைதான் இது. அதுவும் இந்த வீடியோவை பிபிசி, சிஎன்என் போன்ற செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதாகக் கூறி அந்த வதந்தியின் ‘நம்பகத் தன்மையைக்’ கூட்ட ஹேக்கர்கள் முயல்கின்றனர். கூடவே, ‘Breaking News', 'Shocking Video' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி வலைவிரிக்கின்றனர். இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்றால் முதலில் அதைப் பகிர வேண்டும் என்றொரு நிபந்தனைக் கட்டளையையும் ஹேக்கர்கள் விதிக்கின்றனர். அத்துடன் அதைப் பார்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்றும் ஒரு நிபந்தனை, அதைப் பகிர்ந்தாலும் அதில் வீடியோ எதுவும் தெரிவதில்லை. இந்த விஷயத்தின் மறுபக்கத்தில் ஹேக்கர்கள் பெருமளவிலான பணத்தை அள்ளுகின்றனர். அதாவது குறிப்பிட்ட வீடியோவைப் பார்க்க வேண்டுமானால் உங்கள் சுயவிவரங்கள் வேண்டும், இது ஒரு கணக்கெடுப்பு, எனவே உங்கள் சுயவிவரங்களை சரிபார்க்க அனுமதி தரவும்” என்று விதிக்கப்படும் நிபந்தனைகளை நம்பி, வீடியோ பார்க்கும் ஆர்வத்தில் தகவல்களை அளித்தால் அவ்வளவுதான். ஹேக்கர்கள் உங்கள் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கறந்து விடுவார்கள். இந்தத் தகவல்களை வைத்துப் பெரிய அளவில் பணம் சம்பாதித்துவிடுவார்கள். இந்த விஷயத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மால்வேர் மென்பொருள் நிபுணர் கிறிஸ் பாய்டு எச்சரிக்கிறார். இதற்கு முன்பும் கடந்த 2011ம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி, கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் தொடர்பாகவும் இதுபோன்ற வீடியோக்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை. இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின் வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன. - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து பெருங்கடை வரைக்கும்...