Skip to main content

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!


கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம்.

இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள்.

கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது

இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது.

அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை ஆயம்என்றும் ஆயக்கடவை என்றும் ஆயச்சந்தி என்றும் சொல்லுவது வழமை. கரவெட்டியின் பெயர் வரக்காரணம் இந்த ஆயக்கடவை என்றும் சொல்லப்படுகிறது. அதாவது நாட்டின் உள்ளூர் வழிகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி கூடிய கவனம் செலுத்திய ஒல்லாந்தர்கள் இந்த இடத்தில் கிரவெட்(Gravet) நிறுவியிருந்தார்கள். இந்த கிரவெட்(Gravet) தான் பின்னர் திரிவடைந்து கரவெட்டியானது என்றும் ஒரு சான்று கூறப்படுகிறது. ஆனால் இன்றுவரை சரியான ஒரு காரணம் அறியப்பட்டதாக தெரியவில்லை.

எது எப்படியாகயிருப்பினும் இந்த கரவெட்டியின் தெற்கு வாயிலாக இருந்த ஆயக்கடவை அன்றும் இன்றும் ஒரு முக்கியமான தளமாக இருந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் இதனூடாக பஸ் ஓட்டங்கள் கொஞ்சம் இப்ப கொஞ்சம் குறைந்துவிட்டது.

கரவெட்டியில் கோவில்களுக்கும் குறைவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்,  வெல்லனிற்பிள்ளையார் கோவில்,கிளவிதோட்டம் விநாயகர் கோவில், தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் கோவில், யார்க்கரை விநாயகர் கோவில், அத்துளு அம்மன் கோவில், நுணுவில் பிள்ளையார் கோவில், சாமியன் அரசடி வைரவர் கோவில் என்று கோவில்களின் பெயர் படலம் சென்றுகொண்டே இருக்கிறது.
விநாயகர் வழிபாடு, மற்றும் அம்மன் வழிபாடு இங்கு முக்கியத்துவம் பெற்று விளங்குவதோடு கிராமிய தெய்வங்கள் வழிபாடும் இங்கு காணப்படுகிறது.

கரவெட்டியில் அறிவுசார் விருத்திக்காக பாடசாலைகளுக்கும் குறைவில்லை. கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம், கட்டைவேலி யார்க்கரை விநாயகர் வித்தியாலயம், திரு இருதயக்கல்லூரி என்று பாடசாலைகளும் விளங்கி இருக்கிறது. இந்த பாடசாலைகள் கரவெட்டியில் பல்வேறு அறிவாளிகளை உருவாக்கி கரவெட்டியின் திறமைசார் பொக்கிசங்களாக இருப்பது இங்கு நினைவுகூரவேண்டிய ஒன்று.

By -‘[googleplusauthor]’

நன்றி- மூலம்- கரவைக்குரல் இணையம்

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...