எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்
சுன்னாகத்தை சேந்த நபரும் நீர்வேலிச்சேர்ந்த நபரும் சாவகச்சேரியை சேர்ந்த நபரும் ஒன்றாக வடமராட்சிக்கு சென்று கொண்டிருந்தார்களாம் இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில் ஓர் பூதம் இவர்களை வழி மறித்து கொன்று தின்னப்போவதாக மிரட்டியது மூவரும் கெஞ்சிமன்றாடியும் பூதம் விடுவதாக இல்லை நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது நீங்கள் உங்கள் ஊரில் உண்ணக்கூடிய. பதார்த்தத்தை கேளுங்கள் என்னால் தரமுடியாமல் போ னால் உங்களை நான் விட்டுவிடுவேன் நான் கொண்டு வந்தால் உங்களை கொல்வேன் வேறு வழி இன்றி மூவரும் சம்மதித்தனர் முதலில் சவகச்சேரி நபர்கேட்டார் எனக்கு நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே பூதம் சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது அதன் சுவை நன்றாக இருந்தது இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது இரண்டாவதாக. நீர்வேலி நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் கொண்டுவா அடுத்த நொடியில் நீர்வேலியில் இருந்து சுவையுடைய. வாழைபழத்தை பூதம் தருவித்தது இதைபார்த்த மூவருக்கும் மேலும் உதறல் எடுத்தது இப்போது சுன்னகத்து நபரின் முறை இந்தா மாட்டினாய் பார் என்று மனதுக்குள் தையிரியத்தை வரவளைத்துக்கொண்டு கேட்டார் எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்