Skip to main content

பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும்

                              ‘பெண்கள் நம் நாட்டின் கண்கள்’, ‘பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும்’. இந்த முழக்கங்களை நாம் மேடைகளில் கேட்கலாம். ஏன் இந்த முழக்கங்கள்? ஏன் ஆண்களை நாட்டின் கண்கள் என சொல்லவில்லை? ஏன் பெண்ணாய் பிறக்க மாதவம் செய்தல் வேண்டும் என்கிறோம்? இம் முழக்கங்கள் பெண் இழிவானவள், அவள் ஆணுக்கு  அடிமை என்றெண்ணும் சமூகத்தில் இருந்து வந்தவை.
ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படும் இடத்தில் இம்முழக்கங்கள் தேவையே இல்லை.
                   ஒரு வீட்டில் கணவன் வெளியே சென்று பணம் ஈட்டி வருகிறான். மனைவி வீட்டுக்குள் இருந்து வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறாள். இது வேலைப் பகிர்வுதானே அன்றி பெண் அடிமைத்தனம் இல்லை என்று கூறலாம். கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் பெண் எவ்வளவு அடிமைபட்டுக்கிடக்கிறாள் என்று தெரியும்.                     
                      கணவனின் வேலை நேரம் அதிகபட்சம் எட்டு மணி நேரம்.பெண்ணின் வேலை நேரம் நாள் முழுவதும் நடுவில் சில நாடகத் தொடர்கள் பார்க்கிறாள். நன்றாக கவனித்தால் பெண்கள் படங்கள் பார்ப்பதை விட தொடர்கள் பார்பதையே விரும்புகின்றனர் என்பது  தெரியும். ஏன் அப்படி?                   தொடர்களில் நல்லவளும்  பெண், கெட்டவளும் பெண்.அதில் ஆண்கள் பொம்மை மாதிரி வந்து போவார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்து போகிறது. தான் செய்ய முடியாததை, தான் செய்ய நினைப்பதை இன்னொரு பெண் செய்கிறாள்.அவளை தன் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்கிறாள்.அவளை தாமாகவே பாவிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் அவர்கள் தொடர்கள் பார்த்து சிரிப்பதும் அழுவதும். அதை ஆண்கள் கேலி செய்கிறார்கள்।இதே ஆண் ஒரு படத்தில் கதாநாயகன் பத்து பேரை அடிக்கையில்,நாயகிக்கு முத்தம் கொடுக்கையில் கைத்தட்டி விசில் அடிக்கிறான். அவன் ஏன் அவ்வாறு செய்கிறான்?தான் செய்ய நினைப்பதை, முடியாததை கதாநாயகன் செய்கையில் அவனை தாமாகவே நினைக்கிறான். அதனால் அவன் கேலி செய்யப்படவில்லை. ஆண் என்பதால் அவனது செய்கை பெரிது படுத்தபடுவதில்லை. இத்தனைக்கும் அவன் பல நூறு பேரின் முன்னால் செய்கிறான். ஆனால் பெண்ணை அப்படி வெளிப்படுத்த இச்சமுகம் விடுவதில்லை. அவள் தனக்கு என விதிக்கப்பட்ட செயல்களையே தன் வீட்டுக்குள் செய்கிறாள். ஆனால் பெண் கேலி செய்யப்படுகிறாள். இதற்கு காரணம்  ஆணாதிக்க மனோபாவமே.                          தொடங்கியதற்கு வருவோம். வெளியில் சென்று வேலை செய்யும் பெரும்பாலான ஆண்களுக்கு இரவு நேரமும் ஞாயிற்றுக்கிழமைகளும் ஓய்வு எடுக்கும் நேரம். ஆனால் பெண்களுக்கு அப்படி ஒரு நேரமோ நாளோ இருப்பது போல் எனக்குத் தெரிவதில்லை. கந்தர்வன் சொல்லுவார்
        “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை.ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்று.                     அரசாங்கமே விடுமுறை என்று அறிவித்த பொங்கல் தீபாவளி அன்று தான் அவளுக்கு இரட்டிப்பு வேலை.வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை இன்னும் மோசம். அவர்களின் உடல் உழைப்பு  மிகவும் ஆச்சரியப்படவைக்கிறது. பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்பதை இது பொய் ஆக்குகிறது. அவர்கள் தங்களுடைய பலத்தை ஆணுக்கு எதிராக திருப்பத்தெரியாமல் இருக்கிறார்கள். அதற்கான பயிற்சி  அளித்தலே இப்போதைய தேவை.                 மேடைகளில் வாரப்பத்திரிக்கைகளில் ஆண்கள் வீட்டு வேலை செய்வது  ஒரு நகைச்சுவையாக பேசப்படுகிறது.ஆண் மனைவியின் துணியை துவைக்கிறான் என்பது இழிவான செயலாக கருதப்படுகிறது. “உண்மைகள் எப்போதும் நகைச்சுவை ஆவதில்லை.” பெண் துணி துவைக்கிறாள் என்றால் சிரிப்பு வருவதில்லை. ஏனெனில் அது உண்மை. இதில் கொடுமை என்னவென்றால் தாங்கள் அடிமைபட்டு வருவதை பெண்களும் உணராமல் அவற்றை ரசிப்பது தான்.                                       ஒரு ஆணை பெண் என்றால் கோபம் வருகிறது. ஆனால் ஒரு பெண்னை ஆண் என்றால் கோபம் கொள்வதில்லை.ஏனென்றால் ஆண் உயர்வானவன் என்று பெண்ணின் மனதிலே பதிக்கப்பட்டு விட்டது. இது மாற குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் ஆகும்.         இப்போதெல்லாம் பெண்கள் முன்னேறிவிட்டார்கள்.ஆண்களுக்கு நிகராக எல்லா வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள் என்ற பேச்சு நிலவுகிறது.எல்லா துறைகளிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளக்கூடிய விசயம் தான். ஆனால் ஆண்களுக்கு நிகராக ஈடுபடுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. பைலட்,மெக்கானிக்கல் இன்ஜினியர், டிக்கெட் செக்கர் போன்ற பல வேலைகளிலும் பெண்களை காண்பது அரிது.இன்னமும் நம் நாட்டில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு அரசியலில் வருவது என்பது எட்டாத கனவாகவே உள்ளது.இத்தனைக்கும் நமது பிரதமரை ஆட்டுவிப்பவர் பெண்தான். ஜனாதிபதி பெண்தான்,சபா நாயகரும் பெண்தான். இப்படி இருக்கையில் ஏன் இடஒதுக்கீடு வரவில்லை?                                    பெண்களுக்கு அவர்கள் அடிமைப் பட்டிருப்பது உணர்த்த வேண்டும்.நம் நாட்டில் குறிப்பாக தென்னிந்திய பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.இதற்கு காரணம் பெண்சிசுக்கொலை.                    பெண்சிசு கொலைக்கு காரணம் பெண் அடிமைத்தனம்.பெண் அடிமைத்தனதுக்கு காரணம் பெண்சிசு கொலை.பல பெண்கள் கொல்லப்படாமல் இருந்திருந்தால் ஆணுக்கு நிகராக அல்லது ஆண்களை விட அதிகமாக பெண்கள் இருந்திருப்பார்கள்.அப்படி இருந்திருந்தால் காரல் மார்க்ஸ் சொன்ன “அளவு மாற்றம் குணம் மாற்றத்தை ஏற்படுத்தும்”என்ற விதியின் கீழ் பெண்கள் தங்களின் அடிமை விலங்குகளை எப்போதோ தூக்கி எரிந்திருப்பார்கள்.
                       ஒரு முதலாளி எப்படி தொழிலாளியை சுரண்டாமல் வாழமுடியாதோ அதே போல் ஒரு ஆண் ஒரு பெண்னைஸ் சுரண்டாமல் வாழவேமுடியாது.இருந்தாலும் நாம் பெண்களின் அடிமை விலங்குகளை தளர்த்த இயன்ற அளவு முயற்சிப்போம்.

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...