ஒரு பெண் நடு இரவில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!. வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே? மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்) கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா? மனைவி: ஆமாம். அதற்கென்ன? கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!! # இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்..
சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை. இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின் வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன. - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து பெருங்கடை வரைக்கும்...