Skip to main content

விசர் நாய் கடி – ஓர் உண்மை சம்பவம்(மட்டக்களப்பு)




இப்பதிவு எனது மருத்துவன்  நண்பனுடன் உரையாடும் போது கிடைத்த அனுபவ பகிர்வாகும்.

மட்டக்களப்பில் தெரு ஒன்றில் பிச்சையெடுத்து வாழும் 
50 வயது குடும்பத்துப்பெண் மூச்செடுப்பதில் கஷ்டம், கழுத்து மற்றும் நெஞ்சு இருகிக் கொள்கிறது என்று காலை நேரம் எங்கள் வாட்டில் அனுமதிக்கப்பட்டாள்.

கண்களை அகலத் திறந்தவளாக அவசர அவசரமாக ஆழமற்ற மூச்சுக்களை எடுத்தவளாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.

ஆரம்பச் சோதனையில் என்ன நிலைமை என்பதை ஊகிக்க முடியவில்லை. மாலையாகும் போது அவளின் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே போனது. மூச்சு விடுவதில் கஷ்டம் அதிகரிக்க, எதையுமே உண்ண முடியாது, குடிக்க முடியாது என்றாகி விட்டது. சிறு புத்தகத்தை விசிறும் போது வருகிற சிறு காற்றுக்குக் கூட மிக எரிச்சலடைந்து (irritable) பதறுபவளாக இருந்தாள்.

நீரை வாய்க்கெடுத்து மிகக் கஷ்டத்தோடு விழுங்கி உடனே மூச்செடுக்க முடியாமல் வாந்தியெடுத்தவள் நேரஞ் செல்லச்செல்ல நீரை வாய்க்கெடுக்கவும் மறுத்தாள்.

(இப்போது நிலைமை இது தான் என்பதை ஊகித்துக் கோண்டோம்)

இரவாகும் போது நிலைமை மிகமிக மோசமானது. ஜன்னலூடாக வருகிற காற்றுக்கு துடித்து விடுவாள், நீரைக் காணும் போதே உதறிவிட்டு மூச்செடுக்கக் கஷ்டப்படுவாள். மனித நடமாட்டங்களையோ வெளிச்சத்தையோ காணும் போதும் சத்தங்களைக் கேட்கும் போதும் எரிச்சலடைந்து தடுமாறுவாள். அருகே போனால் பாய்ந்து கடிக்கவும் முற்படுவாள். இடைக்கிடையே வலிப்பும் வந்து போனது. இக்காட்சிகளைக் காணுகிற போது இதற்கு மருத்துவமுமில்லை, சாவும் நிச்சயம் என்பதால் மிகவும் கவலையாக இருந்தது.

இனி செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. அவளை இலகுவாக மரணிக்க விடுவது தான் (கருணைக் கொலை செய்வதல்ல, வரப்போகும் மரணத்தை இலகுவாக்குவது.)

கை கால்கள் கட்டிலோடு கட்டப்பட்ட நிலையில் வாட்டின் ஒரு மூலையில் அவள் தனித்து வைக்கப்பட்டு ஜன்னல்கள் மூடப்பட்டு மின்விசிறிகள் மற்றும் மின்குமிழ்கள் நிறுத்தப்பட்டு காற்றும் வெளிச்சமும் சத்தங்களும் எவ்வித அசைவுகளையுங் காணாத படி கருப்புப் பொலிதீனை அவளைச்சுற்றிக் கட்டி அமைதியான சூழல் வழங்கப்பட்டது. அவளது எரிச்சலைக் குறைத்து அமைதியடையவும் தூங்க (sedation) வைக்கவுமென ஒரேயொரு ஊசி மருந்து மட்டுமே இடைக்கிடையே போடப்பட்டது. அதுவும் முழு அமைதியடைந்தவளாக இருக்கவில்லை.

மறுநாள் காலை எதிர்பார்த்த படி மூச்சு விட முடியாமலேயே மரணத்தைத் தழுவினாள்!!!

முதன்முதலில் காற்றுக்குப் பயந்தமை (aerophobia) நீரை வெறுத்தமை (hydrophobia) என்பன rabies எனும் விசர் நாய்க்கடி/ நீர் வெறுப்பு நோய்க்கே உரிய பண்புகளாதலால் நாய்க்கடி நிகழ்ந்ததா என அயலவர் அனைவரிடமும் தீர விசாரித்தோம். நீண்ட நேரம் யோசித்த அவளது தூரத்து உறவினர் சொன்னார், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன் அவர்கள் பிச்சையெடுத்து திரிந்த பின் ஓரிரவு  வாழைச்சேனை சந்தைக் கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு நாய்க்குட்டி அவளைக் கடித்ததாம்!

இது தான் விசர் நாய்க்கடி நோயின் மேலோட்டமான கோரம், எல்லாக் குணங்குறிகளும் இங்கு சொல்லப்படவில்லை.

எல்லா மரணங்களிலும் மரண வேதனையை அனுபவிப்பது மரணிப்பவர் மட்டுமே என்றாலும் இவ்வகை மரணத்தைக் காண்பவர்களுங் கூட வேதனையை உணர்கின்றனர்.

ரேபீஸ் நோய்த் தொன்றுக்குள்ளான நாய் கடித்தால் 2 வாரங்களுக்குள் அந்நாய் மரணிப்பதோடு உரிய மருத்துவம் பெறப்படாவிடின் கடிபட்டவரும் நோய் தொற்றினால்  மரணித்தே விடுவது நிச்சயம்.

இந்நோயை வருமுன் (நாய் கடித்தவுடன்)  இரு வகை ஊசி மருந்துகள் மூலம் காக்க முடியுமே தவிர வந்த பின் குணப்படுத்த முடியாது.

எனவே உரிய முறையில் ஊசி போடப்படாத வீட்டு நாய்கள், கட்டாக்காலி நாய்கள், பூனை, மர அணில், குரங்கு, காட்டெலி, &…கடித்தாலோ அவற்றின் நகக்கீரல் ஏற்பட்டாலோ உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

ஊசி கூடாதென்று உலருகின்ற கூட்டம் இதற்கென்ன செய்யுமோ? நீங்கள் செத்து மடிந்தாலும் சமூகம் நலம் பெறும், அப்பாவி மக்களை கொலை செய்து விடாதீர்கள் என்பது தான் எங்கள் வேண்டுகோள்.

நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிப்பவராயின் முதலில் உங்களுக்கு நாய் கடித்தால் என்ன செய்வீர்கள்???
1-நன்கு காயத்தை சோப் போட்டு கழுவிவேறு எதுவித இரசாயண பதார்த்தம் மூலிகைவகைகளை பயன்படுத்தாமல் காயத்தை  சுத்தப்படுத்தி உலர்ந்தநிலையில் குருதிப்பெருக்கு இருப்பின் இறுக்கி சுத்தமான துணியினால் கட்டி வைத்தியசாலை கொண்டு செல்லுங்கள்.அங்கு காயத்தின் வகையை பொறுத்து திறந்தநிலையில் அல்லது மூடியநிலையில் பராமரிக்கும் ஆலோசனை தருவார்கள்.
2-மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லா வைத்தியசாலை நாய் கடித்த உடனே முதல் ஊசி போடமாட்டார்கள் முதல் ஊசி போடும் வைத்தியசாலை -களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, காத்தான்குடி, வாழைச்சேனை மற்றும் அடுத்துவரும் இரண்டாம், மூன்றாம், நான்காம் தடுப்பு ஊசி அருகிலுள்ள சில கிராம வைத்தியசாலைகளில் சிலவேளை போடலாம்.அதனால் உரிய தடுப்பு ஊசி மறுதிகதி முன் பக்கத்து கிராம வைத்தியசாலை கேட்டு தெளிவு பெறலாம்.
இவற்றையும் நீங்கள் வாழும் கிராம நிலைகளை ஊசியிலுள்ள வைத்தியசாலைதூரம் என்பவற்றை கருத்தில் கொண்டு நாய் கடித்த அன்றே தடுப்பு ஊசி ஏற்ற வைத்தியசாலை செல்வது நல்லம்.

3-தடுப்பு ஊசி காலத்தில் பன்றி இறைச்சி தவிர்ப்பது சிறந்தது 
4-தடுப்பு ஊசி ஏற்றும் காலத்தில் கடித்த நாயை கவனித்தல் வேண்டும்.சிலவேளை கடித்தநாய் முன்கூட்டியே இனம்தெரியாதநோயினால் இறந்தால் நாய் உரிய இரசாயண பகுப்பாய்விற்கு அனுப்ப வேண்டி வரும்.
5-தடுப்பு ஊசி உரியநாள் நீங்கள் வெளியூர் செல்ல இருப்பினும் அவ் தடுப்பு ஊசி படிவத்துடன் சென்று அங்குள்ள வைத்தியசாலையில் போடுங்கள்.
6-தடுப்பு ஊசி போடும் காலத்தில் நீர்வெறுப்பு நோய் (Hydro phobia),தலையிடி, மூச்சுக்கஸ்டம்,ஒவ்வாமை தோலில் வீக்கம் இருப்பின் உடனடியாக வைத்தியரை அணுகுங்கள்.

நன்றி -கிழக்கு மாகாண எல்லாளன் விழிப்புணர்வு செய்தி.



Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...