வறுத்த மக்காச் சோளம் அல்லது பூட்டா அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகவும் இருக்கிறது. இருப்பினும், இதை உண்டவுடன் குடிநீரை உடனடியாக குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுமாம். நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இரைப்பைப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலிக்கும் இது வழிவகுக்கும். ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது? தண்ணீருடன் மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒன்றாக உட்கொள்ளும் போது பலர் வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாக புகார் செய்துள்ளனர். சோளக்கருது உண்டவுடன் குடிநீரை குடிப்பதன் மூலம் ஜீரண நொதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றமடைகின்றன எனவே செரிமான வேகம் குறைகிறது. சோளக்கருதில் உள்ள சிக்கலான கார்ப்ஸ் , ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் வாய்வு , அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உருவாகும் என டாக்டர் அஷுடோஷ் கூறுகிறார். எவ்வளவு நுரம் கழித்து குடிக்கலாம்? சிறந்த நேர இடைவெளி, குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர, எலு...