வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய காதலி முடிவெடுத்ததால் பட்டதாரி மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறான்.
இன்னும் யாரும் இந்தப் பிரச்சனையை பெரியளவில் பேசத் தொடங்கவில்லை. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ஈழத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறி வருகிறார்கள்.
விரைவில் யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அடி விழும் என்று எதிர்பார்க்கிறேன்.
நான் தாயகத்திற்கு சென்ற பொழுது உறவுக்கார இளைஞன் ஒருவன் கேட்டான்…
‘நாங்கள் காதலிக்கின்ற பெண்களை வெளிநாட்டில் இருந்து வந்து தூக்கிக் கொண்டு போகின்றார்கள்! இது நியாயமா?’
நான் சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்..
‘தம்பி…. திரைப்படங்களில்தான் நீங்கள் ஹீரோ, வெளிநாட்டு மாப்பிள்ளை கடைசியில் வந்து தியாகம் செய்து விட்டு போவான், அல்லது அடிவாங்கி ஓடுவான், ஆனால் உண்மையான வாழ்க்கையில் நாங்கள்தான் ஹீரோ, கடைசிக் கட்டத்தில் வந்து நீங்கள் காதலிக்கும் பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடுவோம்’
என் எகத்தாளத்தை அவன் ரசிக்கவில்லை. தலையைக் குனிந்து கொண்டு சோகமாக நின்றான்.
அங்கே இருக்கின்ற பெரும்பாலான பெண்களுக்கு சிறுவயதிலேயே வெளிநாட்டுக் கனவு வளர்க்கப்படுகிறது. தன்னுடைய எதிர்காலத்தை வெளிநாட்டில் கற்பனை செய்தபடிதான் அவர்கள் வளர்கின்றார்கள்.
இடையில் காதல் என்பது ஏற்பட்டாலும், அதற்காக அவர்கள் தங்கள் கனவினை விடத் தயாராக இல்லை. இதில் அந்தப் பெண்களை தவறு சொல்லவும் நான் விரும்பவில்லை.
ஈழத்தில் வாழும் இளைஞர்கள் பெண்களிடம் ‘உனக்கு வெளிநாடு செல்லும் ஆசை இருக்கிறதா?’ என்று கேட்டு உறுதிப்படுத்தி விட்டு காதலிக்க தொடங்குவது நல்லது.
இதையும் மீறி ஏமாந்து போனாலும் கூட அதற்காக உயிரை விடுவதும், அந்தப் பெண்ணைப் பற்றி இணையத்தில் போட்டு அவமானப்படுத்துவது எல்லாமே கடைந்தெடுத்த முட்டாள்தனம்.
வாழ்ந்து பாருங்கள்! வாழ்க்கையில் ஆயிரம் காதல்கள் வந்து போவதை உணர்வீர்கள்!
நன்றி: வி. சபேசன்-
உள் நாட்டில் நம்ம பசங்க கசக்கி புளிந்ததை தான் வெளிநாட்டு மாப்பிளைகள் புதுசு என்டு நினைத்து தூக்கிட்டு போறாங்க,
எனக்கு வெளிநாட்டு மாப்பிளை என்டலே மனதில் பாவம் என்னும் நினைப்புடன் நக்கல் சிரிப்பு தான் வரும் சகோதரன் வி.சபேஸ் அவர்களே.
என்ன நான் சொல்லுறது சரி தானே உள் நாட்டு மாப்பிளைகளே??????????????
நன்றி