உலகையே அச்சுறுத்திக்கொண்டு வரும் *கொரானா வைரஸ்* கிருமியிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகள்.
1 - தினம் தோறும் மிளகு ரசம் சாப்பாட்டுடன் சேருங்கள் அல்லது ஒரு டம்ளர் அளவாவது குடியுங்கள்
2 - தினமும் காலையில் காலி வயிறாக இருக்கும்போது 5 முதல் 10 மிளகுகள் வரை நன்றாக மென்று தின்று விட்டு வெந்நீர் குடியுங்கள்.
3 - தினமும் காலை மாலை சூரிய உதய நேரம் மற்றும் அஸ்தமன நேரங்களில் வரும் சூரிய கதிர்வீச்சை சரீரத்தில் படும்படி பார்த்துக்கொள்ளுங்கள்
4 - ஆஸ்த்மா முத்திரை தினமும் குறைந்தது பத்து நிமிடங்களாவது பயிற்சி செய்யுங்கள்.
5 - பத்து துளசி இலைகள் மற்றும் நான்கு கிராம்பு இரண்டு வெற்றிலை நான்கு மிளகு போன்றவற்றை எல்லாம் இரண்டு டம்ளர் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்றிய உடன் அதனை நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் தினமும் குடித்து வரலாம்.
6 - மிக முக்கியமாக எந்த சூழலிலும் பயந்து விடக்கூடாது.பயம் வந்து விட்டால் உங்களை யாராலும் காப்பாத்த முடியாது.பயம் இல்லையென்றால் உங்களை எந்த நோயாலும் ஒன்றும் செய்ய முடியாது.
7 - சுடுநீரில் கல் உப்பு போட்டு வாய் கொப்புளித்து வரலாம்.
8 - தினமும் காலையில் வெறும் வயிற்றில் திரிகடுகு சூரணம் தேனில் குழைத்து சாப்பிடுங்கள்.
9 - நேரம் கிடைக்கும் போதெல்லாம் தாளிசாதி சூரணம் எத்தனை வேளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
எந்தமாதிரி நோய் வந்தாலும் விரட்டும் அளவிற்கு மருத்துவ முறைகளை இந்த உலகிற்கே அளித்த பாரம்பரியம் நம்முடையது.இந்த உலகில் நம்மால் முடியாதது எதுவுமே இல்லை எனும் அளவிற்கு சாதித்த பரம்பரை நம்முடையது,கொரானா இந்த உலகை வேண்டுமானால் அச்சுறுத்தலாம்.நம்மை அச்சுறுத்த முடியாது.மேலே சொன்ன விதிகளை கடைபிடியுங்கள்.ஆரோக்கியமாக வாழுங்கள்.