Skip to main content

சீனாவில் தமிழ் நாட்டு வணிகர் கட்டிய சிவன் கோயில்....!!



சோழ பேரரசின் இறுதிகாலத்தில் சீனாவில் வணிகம் செய்ய சென்ற வணிகர்கள் அங்கு தங்கி இருந்த போது தென் சீனாவின் முக்கிய துறைமுகமான குவாங் ஹீவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வணிகர்  சம்பந்தப் பெருமாள் தவச் சக்கரவத்திகள் அப்போது அங்கு ஆட்சி செய்த மன்னர் குப்லாய்கான் அனுமதி பெற்று கி.பி.1281 ஆம் ஆண்டு திருக்கணீசுவரமுடைய நாயனார் கோயிலை கட்டினார்.

சகயுகத்தில் சித்ரா பவுர்ணமி நாளில் இந்தக் கோயில் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இவை அக்கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டில் உள்ளது.அக்கல்வெட்டின் இறுதியில் சீன எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் வருடங்களாக தமிழ்நாட்டில் இருந்து வணிகர்கள் சீனாவில் வணிகம் செய்து வருகிறார்கள்.அங்கிருந்தும் இங்கு வந்து வணிகர்கள் வணிகம் செய்தனர். பூம்புகார், கொற்கை, கடல்மல்லை,பொதுகே போன்ற துறைமுகங்களில் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டன.

கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆகழாய்வில் சீனப் பீங்கான் பாண்டங்கள் பல கிடைத்துள்ளன. அவை குங்பாய் மற்றும் வெள்ளை நிற பீங்கான் ஆகும். இவை 11மற்றும் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும். தாராசுரத்திலும் இதே காலக்கட்டத்தை  சார்ந்த ஜிந்தாசென்,செலடான், லோங்குவான், யுயே, பீங்கான் பாண்டங்கள் கிடைத்துள்ளன.12,13 ஆம் நூற்றாண்டில் சீன சுங் அரசர்கள் வெளியிட்ட காசுகள் தஞ்சை மாவட்டம் ஓலயகுன்னம்,தல்லிக்கோட்டை போன்ற ஊர்களில் கிடைத்துள்ளன. 

பூம்புகாரிலூம் சீன மது ஜாடி, சீனக்காசு,சீன குடுவை போன்ற பல பொருட்கள் கிடைத்துள்ளன. இவையனைத்தும் சோழநாடு சீனாவுடன் இருந்த வணிக தொடர்பை உறுதி செய்கிறது...














Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...