Skip to main content

"அன்பு" இந்த சொல் பற்றி அறியாதவர்கள் அல்லது உணராதவர்கள் யாரும் இந்த பதிவை பார்க்க மாட்டீர்கள் என நம்பி தொடர்கிறேன்!



அன்பு என்றால் என்ன ? 
சட்டென சொல்வீர்கள் "ழவ்" சரி ழவ் என்றால் என்ன ? இப்போது முழிக்கிறீர்களா ? அப்படியென்றால் இதுவரை நீங்கள் இந்த அன்பு என்ற விடயம் பற்றி அவ்வளவாக சிந்தித்ததில்லை 
அல்லது இதுவரை அதைப் பற்றி சிந்திக்க தேவைப்பட்டிருக்காது அப்படித்தானே ?... 

அன்பு என்றால் என்ன ? 
கொஞ்சம் யோசியுங்களேன் ... 
அது தான்... அதே தான் .... கிட்ட வந்துட்டீங்க ... 
இன்னும் கொஞ்சம் ... கம்மான் கம்மான் ... 
மனசில இருக்கு வாய்ல வர மாட்டேங்குது என்கிறீர்களா ? 
கொண்டை வரைக்கும் வருது சொல்ல தெரியல ங்கிறீங்களா ? ... 
அட என்னா போங்க நீங்க .... 

சரி இதை நினைத்துக் கொண்டு இப்போ யோசியுங்கள் ( "care" )கவனிப்பு ... இப்போது யோசியுங்கள் அன்பு என்றால் என்ன ? 

எதோ வர்ர மாதிரி இருக்கு வரல ங்கிறீங்களா ? ... 
அப்போ கூடவே " விட்டுக் கொடுப்பு" இதை சேர்த்துக்கோங்க ...  

அப்பவும் வரவில்லையா ? 
ஆனால் அதை உணர்கிறீர்கள் வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை அப்படித்தானே ? 
அப்போ அது தான் அன்பு என்கிறீர்களா ? 
எது 
அது 
அதுன்னா ? 
"உணர்கிறேன் சொல்ல முடியல" 
 என்ன குழப்பமா இருக்கா ? 
நல்லா யோசிங்க 
தனிய இருந்து 
நேரம் எடுத்து
யோசியுங்கள் 
எங்க இப்ப சொல்லுங்க அன்பு என்றால் என்ன ?