கதைக்களம் நம்ம வீட்டுப்பிள்ளை
சிவகார்த்திகேயன் பெரிய குடும்பத்தில் எந்த ஒரு நல்லது கெட்டது என்றாலும் முதல் ஆளாக தோல் கொடுத்து அனைத்து சொந்த பந்தங்களையும் விட்டுக்கொடுக்காமல் முறை செய்கிறார்.
ஆனால், அவருக்கு அப்பா இல்லை என்பதால் மற்ற அனைவருமே அவரை குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதில்லை, சிவகார்த்திகேயன் தங்கையான ஐஸ்வர்யா ராஜேஸையும் சேர்த்து.
தங்கைக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என சிவகார்த்திகேயன் ஊர் முழுவதும் அழைகிறார். ஆனால், யாருமே கட்டிக்கொள்ள முன்வராத போது நட்டி அவரை திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார்.
ஆனால், அவர் முன்வருவது சிவகார்த்திகேயனுடன் ஏற்கனவே இருக்கும் ஒரு பகைக்காக தான், அது தெரியாமல் தங்கையை கட்டிக்கொடுக்க, தன் பின் அவர் சிவகார்த்திகேயனை மதிக்காமல் இருக்க, பதிலுக்கு சிவகார்த்திகேயன் தங்கைக்காக இறங்கி போக, கடைசியில் என்ன ஆனது என்ற பாசப்போராட்டமே இந்த நம்ம வீட்டு பிள்ளை