Skip to main content

மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது நடந்த சுவார்சியமான சம்பவம்!




கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா

இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் .

மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . 

". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."

அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்...

இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம்  "Being Professional & Focus only on what you are trained""

கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று .

மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம்  செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹#கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்.

இதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்!

This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""

கொள்ளை நடந்த போதே,வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது,அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார். 

" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்.

""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் "
 This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.

இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை,இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .
 
இதுதான் சுயநலமான உலகம்!
This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.

மறுநாள் செய்திகளில்,வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது .அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி.

கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து,பணத்தை எண்ணத் தொடங்கினர் .

எவ்வளவு எண்ணியும் ,அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை .

கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ," நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்.

ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது

இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்

True. Knowledge is nowadays very important than money in this world.

இந்தியா இப்படிப்பட்ட திருடர்களா லும், அமைச்சர்களாலும்தான் ஆளப்படுகிறது!பாவம் மக்கள்!

-படித்ததில் பிடித்தது

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.