Skip to main content

கரவெட்டியில் சர்வதேசத் தரத்தில் உணவகங்கள்! பாராட்டத் தெரியாத ஆளுநர் அலுவலகம்!



கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 உணவகங்ள் 'ஏ' தரத்தில் இயங்குவதுடன் அனைத்து உணவங்களும் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தில் மட்டும் உணவகங்களுக்கு எதிராக 42க்கு மேற்பட்ட வழக்குகள் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் சில உணவகங்களை மட்டும் தரிசித்த ஆளுநர் அலுவலகத்தைச் சார்ந்த சில பயிலுநர்கள் ஏற்கனவே பொதுச் சுகாதார பரிசோதகர்களால் திருத்த வேலைகளுக்காக கால அவகாசம் வழங்கப்பட்ட சில உணவகங்களில் மட்டும் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வேறு பிரதேசங்களில்  எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் இணைத்து ஊடகங்களில் வெளியிட்டதுடன் மிகவும் நல்ல நிலையில் இயங்கி வரும் தரமான உணவகங்களைத் தரிசித்த போதிலும் அதனது படங்களை வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்துள்ளார்கள். 

அண்மையில் நடைபெற்ற ஜி.எம்.பி எனப்படும் சர்வதேச தரச்சான்றிதழ் விழாவில் கரவெட்டியைச் சார்ந்த 3 உணவங்கள் தெரிவு செய்யப்பட்டு அதனது தரங்கள் உறுதி செய்யப்பட்டு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதற்காக அப்பகுதியினைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பல வருடங்களாக அரும்பாடு பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர வெகு விரைவில் அனைத்து உணவங்களுக்குமான தரக் கணிப்பீடு கணணி மயப்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. 
ஆளணிக்குறைபாடு உட்பட பல்வேறு பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றும் பணியாளரர்களுக்கும் மிகுந்த சிரமங்களின் மத்தியில் தமது தரத்தினைத் தக்கவைத்துக் கொள்ளும் உணவக உரிமையாளர்களுக்கும் ஆளுநர் அலுவலகத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மிகுந்த மனச் சோர்வினை ஏற்படுத்தியிருக்கின்றன. பொது மக்களின் பார்வைக்காக சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.








Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...