Skip to main content

இந்த பதிவை இட்டமைக்கு பெண்கள் மன்னிக்கவும்!



ஒரு நல்ல சிந்தனையில் பதிவு செய்துள்ளேன் தவறான என்னத்தில் பதிவு இடவில்லை

அவசியம் ஆண்கள் படிக்கவும்  பெண்களும் 
படியுங்கள் படித்த பின் உங்கள் கருத்துக்களை சொல்லவும்...

ஒரு சில ஆணகள் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கலாம் இருப்பினும் 
நானும் ஒரு ஆணாக இருப்பதால் நான் படித்து தெரிந்ததை என் தோழர்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் 

பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஆண்களால்  தீட்டப்பட்ட வேண்டியவர்கள்  
அல்ல!

மாதவிடாய் காலத்தில் ஆண்களால் பாஷத்துடனும் அரவணைப்புடனும் பாதுகாப்புடணும் பாதுகாக்க வேண்டும் அதுவே ஆணின் சிறப்பு நன்றி வணக்கம்

அவளின் உடலியல் செயல் பற்றி
வெளிப்படையாக பேசுவதை,
அருவருப்பாகவும் அவமானமாகவும்
இன்னும் பார்க்கிறது கூன் விழுந்த வளர்ந்த சமூகம்..!!

தீட்டுப் பட்டவள் அவளென சாமி அறையிலிருந்து சமையலறை வரை
செல்லக்கூடாது, ஊறுகாயைத் தொடக்கூடாது, என்று தள்ளி ஒதுக்கி
சீரழிக்கிறது அறிவாளி சமூகம்..!!

சமுதாய பூச்சாண்டிகளே பயம் காட்டியது போதும் அவளைச் சுற்றி கட்டப்படும்
கட்டுக்கதைகளும், கற்பனைகளும்
பெண்ணை இன்னும் புண்ணாய் ஆக்குகின்றன.!!

அகத்தின் செயலுக்கு புறத்தில் குறை கூறும்
இந்த சமூகத்தின் குருட்டு கண்களுக்கு
விளக்கெண்ணெய் விட்டு வெளிச்சம் தரவேண்டும்..!!

தீட்டு உடலில் அல்ல இச்சமூகத்தில் தான்,
நேரடியாகவோ மறைமுகமாகவோ
பெண்ணின் மீது இன்னும் ஆதிக்கம்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது..!!

ஒரு பெண் தான் பூப்பெய்தும்போதே
அவளுக்கு அளிக்கப்படும் முதல் அறிவுரை,
அப்பாவிடம் கூட மாதவிடாய் பற்றி
பேசக்கூடாது என்பதே...!!

பேசக் கூடாத விசயமல்ல மாதவிடாய்
பெண்களின் உலகத்தை ஒவ்வொரு ஆண்களும் புரிந்துகொள்ள வேண்டிய
கடமை இருக்கிறது..!!