பிக்பாஸ் செய்யும் நுணுக்கமான மூளை சலவை #சினிமா கூத்தாடிகள் மற்றும் #அரசியல் விஐபி-க்கள் சிலரைத் ஒரே குடும்பமாக வீட்டிற்குள் அடைக்கிறார்கள்.
அங்கு ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு உறவுமுறை உருவாகிறது. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, மகன், மகள் என்று, பின்னர் வாரம் ஒருமுறை எலிமினேஷன் என்ற பெயரில் ஒவ்வொருவரும் சக உறுப்பினர்களை ஏதோவொரு காரணத்திற்காக கட்டாயம் எலிமினேஷன் செய்கின்றனர். கோமாளி மக்களையும் எலிமினேஷன் செய்ய சொல்லுகின்றனர் காரணம்
எத்தனை கோமாளி மக்கள் Voting பண்ணி இருக்குனு பார்பதற்கு . ஆனால் விபசார bigbossகு திரைக்கதை வசனம் எழுதிரவன் தான் யார் வெளியேறனும் என்று முடிவெடுப்பான்😂
பிக்பாஸ் மூன்று பாகத்திலுமே நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குள்ளும் முறைதவறி கட்டித்தழுவுவது, முத்தம் கொடுப்பதுமாக இருக்கிறார்கள். காதல் என்று எதையாவது கிளப்பி விடுகிறார்கள். தன்னை அப்பாவாக காட்டிக்கொள்ளும் சேரன் பார்க்கின்ற எல்லா பெண்களையும் கட்டித்தழுவுகிறார். தனது மகள் முறையான லோஸ்லியாவை கசக்கி எடுக்கிறார்.
நண்பர்களே கூறுங்கள் உங்கள் எவர் வீட்டில் தந்தை தனது மகளை இப்படிப் போட்டுக் கசக்குகிறார். எந்த மகன் தனது தாயை இவ்வளவு இறுக்கமாக கட்டியணைக்கிறான். இந்த நிகழ்ச்சியின் அனைத்து ஷோக்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளே. இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்கள் அனைத்திலுமே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மெல்ல மெல்ல நமது Sub-Conscious Mind –ல் முறைதவறிய குடும்ப நடவடிக்கைகளை பதிய வைக்கிறார்கள்.
இரவு நேரங்களில் இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்குள் வேட்டு வைக்கிறார்கள்.
***************************** Share ur friends