அப்பிள் கொம்பனி 2015 போன் விற்பனைக்கு என்று ஒரு முறைமை ஒன்றை அறிமுகம் செய்திருந்தது . அதன் பெயர் “i phone upgrade program. “ அது பற்றி தெரியுமா?
அதன்படி ஒருவர் புது போன் வாங்கனும் என்றால் குறிப்பிட்ட அளவு பணத்தை மட்டும் செலுத்தி (£ 69 ) மிகுதியை 20 மாத தவணைகளாக பிரித்து செலுத்தலாம் . இதற்கு வட்டி இல்ல .
ஆனால் இந்த முறையில் போன் வாங்குவது என்றால் "apple care " என்கிற சேவையையும் வாங்க வேண்டும் . அதன் பெறுமதி£ 199 . Apple care என்பது ஒரு warrenty . குறிப்பிட்ட காலத்துக்கு techincal சம்பந்தமான பிழைகள் மற்றும் போன் உடைவு என்பவற்றுக்கான உத்தரவாதமாகும் . போன் கீழே விழுந்து உடைந்தால் கூட அவர்கள் திருத்தி தருவார்கள் . முழு காசு கொடுத்து போன் வாங்குற ஆட்களே இந்த சேவை யையும் பணம் செலுத்தி பெற்று கொள்வார்கள் . போன் தொலைந்து போவதற்கு இது பிரயோகமாகாது
எனவே இதன் படி போன் காசு + apple care காசான 199 உம் கூட்டி முதலில் கட்டும் 69 பவுண்ட்ஸ் ஐ கழிச்சு வாற தொகையை 20 ஆல் பிரித்து வரும் தொகையை ஒவ்வொரு மாதமாக செலுத்தலாம்
இந்த iphone upgrade program ஐ லண்டனில் barclays வங்கியின் barclays finance partners எனும் நிறுவனம் வழங்குது . வழமையாக கடன் தரும்போது செய்யப்படும் கிரெடிட் செக் செய்யப்பட்டு அந்த கடன் வாழங்குவதற்கு உரிய தகுதி உள்ளதாயின் உடனடியாகவே நீங்கள் போனை வாங்கலாம் . இதற்காக 10 நிமிடங்கள் கூட தேவைப்படாது
இதன் படி நீங்கள் வாங்கும் போனுக்கான காசை 20 மாதமும் செலுத்தினால் போன் உங்களுக்கு சொந்தமாகும் . அடுத்த புது போன் வரும்போது ( 12 மாதங்களில் ) இதை நீங்கள் கொடுத்து புது போன் க்குரிய iphone upgrade program இல் இணையலாம் . இதற்காக எந்த வித மேலதிக கட்டணங்களும் செலுத்த தேவையில்ல . புது போனின் விலைக்கு ஏற்ற வகையில் மாத காசு மட்டும் மாறு படும்.
ஒவ்வொரு புது போனும் வர வர மாத்தி கொண்டே இருக்கலாம் . ஆனால் எந்த போனும் உங்களுக்கு சொந்தமாகாது . கிட்ட தட்ட புது போனை 12 மாத காலம் வாடகை செலுத்தி பயன்படுதுற மாதிரி தான்
###
உதாரணமாக
Iphone 11 pro max இன் விலை - £1299
Apple care - £ 199
மொத்தம் = £1498
இதில் முதலாவதாக £69 செலுத்தனும் . மிச்சம் £1429
இந்தத்தொகை 20 மாதங்களுக்கு கட்ட வேண்டும்
ஆகவே ஒரு மாதத்துக்கு 71 .45 கட்டினால் சரி
####
இந்த முறையிலேயே நான் போன் வாங்குறனான் .
என்னிடம் இருக்கும் போன் கொடுத்து ஒவ்வொரு முறையும் புது போன் வர புது போன் வாங்குவேன்
அவ்வளவு தான் . கடைசியில் என்னிடம் போன் இருக்காது .
எனவே பழைய போனை தாங்கோ அண்ணா என்று கொண்டு in box பக்கம் யாரும் வராதெங்கோடா / டி
நன்றி
சிவரதன் வயிரவநாதன் முகநூல் இருந்த பதிவு