Skip to main content

பல கதைகள் பேசும் கரவெட்டி மதவடி!

 

நண்பர் ஒருவர் இந்த மதவடியால் செல்லும்போது எமது நினைவு வந்ததாக கூறி கீழே உள்ள படத்தை அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றிகள்.

வடமராட்சியில் உள்ள மதவுக்கு எல்லாம் பொதுவாக ஒரு கதை இருக்கும். ஆனால் இந்த மதவுக்கு மட்டும் ஒரு வித்தியாசமான ஒரு கதை உண்டு.

மன்னாரில் இருந்தும்; மட்டக்களப்பில் இருந்தும் வந்தவர்கள் நெல்லியடி பஸ் நிலையத்தில் வந்து இறங்கி மதவடி என்ற ஒற்றை முகவரியோட வந்து சேர்ந்தனர்.

எந்த இயக்கத்தில் இருந்தாலும் ஒருமுறையாவது இந்த மதவடியில் வந்து குந்தி அரசியல் பேசாதவர்கள் இருக்க முடியாது.

புலிகளின் பொறுப்பாளராக சுக்ளா இருந்தபோது மதவடிகளில் இளைஞர்கள் இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார்.

ஆனால் இந்த மதவடியில் மட்டும் இளைஞர்கள் தொடர்ந்து இருந்தனர். இதனால் ஒருநாள் திடீரென்று வந்து இருந்தவர்களை பிடித்துச் சென்றுவிட்டார் அவர்.

இரவு நேரம். இருந்தாலும் இதை அறிந்ததும் உடனே மக்கள் திரண்டு வந்து பிடிபட்ட இளைஞர்களை மீட்டு விட்டனர்.

அப்போது “ இவர்களால் மக்களுக்கு இடைஞ்சல் என முறைப்பாடு வந்துள்ளது” என்று சுக்ளா கூறினார்.

ஆனால் மக்களோ “ இவர்களால் எங்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. இவர்கள் மதவடியில் இருப்பதுதான் எமக்கு பாதுகாப்பாக இருக்கிறது” என்று கூறினார்கள்.

அதன்பின் சுக்ளா இந்த மதவடியில் இளைஞர்கள் இருப்பதை கண்டுகொள்ளவில்லை.

நான் அறிந்தவரையில் மதவடியில் இருந்த இளைஞர்களுக்காக மக்கள் திரண்டு சென்று மீட்டெடுத்தது பெருமை இந்த மதவடிக்கு மட்டுமே உண்டு.

இந்த மதவில் இருந்த சிலர் இன்று உயிருடன் இல்லை. ஆனால் இந்த மதவு இருக்கும்வரை அவர்கள் நினைவுகள் இருக்கும்

இந்த மதவுக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால் எத்தனை அற்புதமான கதைகளை இது கூறும். ஆம் அத்துனை வரலாறு இதற்கு உண்டு அல்லவா.

இது மதவுதான். ஆனால் இதில் வெள்ளம் பாய நான் ஒருபோதும் காணவில்லை. ஆனால் இதன் ஓட்டைகளில் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் வைத்து எடுத்திருக்கிறோம்.

சிலவேளைகளில் சயிக்கிளை கூட அப்படியே விட்டிட்டு சென்றிருக்கிறோம். அடுத்த நாள் திரும்பிவரும்வரை அப்படியே இருக்கும். களவு என்பதே கிடையாது.

சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர்போல வருமா என்று இளையராசா பாடிய பாடல் கேட்கும்போதெல்லாம் இந்த மதவடிக்காக பாடியதுபோல் ஒரு உணர்வு வந்து செல்கிறது.

பாலன் அண்ணா

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...