Skip to main content

பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்! இந்தக் காலத்தில் இப்படியுமா?

பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தின் செயற்பாடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
   
       
   
  இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் வளர்ந்து பிரித்தானியாவில் வாழைப்பழம் செய்கையில் ஈடுபட்டு வரும் தமிழ் குடும்பம் ஒன்று பிரபல்யம் அடைந்துள்ளது. பிரித்தானியா கொவன்றி பிரதேசத்தில் Radford பகுதியில் வாழும் நபர் ஒருவர் பாரிய வாழைப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளார். Radford சாலையில் வசிக்கும் சின்னையா செந்தில்செல்வன் தனது வீட்டின் பின்னாலுள்ள தோட்டத்தில் 300 வாழைக் கன்றுகளை பயிரிட்டுள்ளார். முதன்முதலாக ஜேர்மனியில் வாழ்ந்த சின்னையா, பச்சைவீட்டு வேளாண்மைக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் Coventry பகுதிக்கு சென்ற பிறகு, அவர் தனது பயிர்ச்செய்கை திறன்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். வெப்பமண்டல தாவரங்களில் அவர் அக்கறை செலுத்தியுள்ளார். அதற்கமைய வாழை மரங்கள் மற்றும் பிற வெப்பமண்டல மலர்களை வளர்ப்பதில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். அதற்கமைய கோடை காலமான ஒக்டோபரில் வாழை மரங்கள் வளர ஆரம்பித்துள்ளன. சின்னையா செந்தில்செல்வனின் வாழை மரங்கள் தற்போது 3 மீற்றர் உயரமாக வளர்ந்துள்ளன. அந்த வாழைமரங்கள் நன்கு வளர்ந்த போதிலும், இன்னமும் வாழைப்பொத்தி வெளிவர ஆரம்பிக்கவில்லை. எதிர்வரும் வருடம் பாரிய அறுவடை ஒன்று காத்திருப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். குளிர்கால நெருங்குகையில் அதனை சூடாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சின்னையா குறிப்பிட்டுள்ளார்.
   
       
   
  இலங்கையில் எனது பெற்றோர்களின் தோட்டத்தில் மூன்று அல்லது நான்கு ஆயிரம் வாழை மரங்கள் இருந்தன, அதனை நாங்கள் விற்பனை செய்தோம். சிலர் இங்குள்ள எனது வீட்டிற்கு வருகிறார்கள், அவர்கள் இலங்கையில் தாம் இருப்பதனை போன்று உணர்வதாக குறிப்பிட்டுள்ளனர். பெரிய வாழையிலைகளை நான் கோவிலுக்கு வழங்குவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த வாழைப்பழ செய்கையின் ஊடாக குறித்த பகுதியில் தான் மிகவும் பிரபல்யமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ