Skip to main content

கொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கவனத்திற்கு! படித்து விட்டு Share பண்ணுங்கள!



Dolphins hires  Van இல் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள்

நீங்கள்?
   
       
   
  உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள்

1. அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாரதி மட்டும் அல்ல, நீங்கள் எடுக்கும் சில அவசர தீர்மானங்களும் தான். அத்துடன் உங்கள் தீர்மானங்ககளை எடுக்கும் போது இதனால் வரும் பின் விளைவுகளை கொஞ்சமும் நீங்கள் சிந்திப்பதில்லை.

2. வாகனத்தை hire பண்ணும் போது வாகன சாரதி யார் என்று பாருங்கள் அத்துடன் இரவு நேர பயணம் என்றால் ஏற்கனவே அவர் இந்த ரூட் இல் இரவில் ஓடிய அனுபவம் உள்ளவரா ? அத்துடன் தொடர்ச்சியாக ஓடுபவரா என்று பாருங்கள். ஏனெனில் அனுபவம் உள்ளவர் தான் நித்திரை இல்லாமல் ஓடமுடியும். இதுதான் மிகமுக்கியமான ஒன்று.

வான் condition ஐ விட driver  condition ஐ பார்க்க வேண்டும்

3. வாகனத்தை hire பண்ணுவார்கள் நீங்கள் அதனால் வாகன சாரதியை உங்கள் கட்டுப்பாடிற்குள் வைத்திருக்க வேண்டும். Driver சொல்லுவற்கெல்லாம் தலை ஆட்ட கூடாது.
உதாரணமாக அவர் அடிக்கடி phone கதைப்பவராக இருந்தால் நாம் அதை கட்டுப்படுத்த அறிவுறுத்த வேண்டும்

4. Maximum  speed என்ற ஒன்று உண்டு எனவே அதை தாண்டி போகிறாரா என்று பார்க்க வேண்டும்.

5. கூடுதலாக எந்த வான் சாரதியும் இரவு நேரத்தில் தான் பயணிக்க ஆசைப்படுவான் ஏனெனில் அவனுக்கு driving செய்வது மிகவும் இலகு. ஆனால் இங்கே தான் ஆபத்து இருக்கு, road இல் வாகன நெரிசல் இரவு நேரங்களில் மிகவும் குறைவு  இதனால் இந்த சூழ்நிலை driver ஐ நித்திரை கொள்ள வழி வகுக்கும்.

6. பயணிக்கும் நேரம்.??? பொதுவாக கடுமையாக நித்திரை தூங்கும் நேரம் அதிகாலை 2 மணி தொடக்கம் 5 மணி வரை எனவே எமது பயணத்தை மாலை ஒரு 5 மணி அளவில் தொடங்கினால் நாம் யாழ்ப்பாணத்தை அல்லது கொழும்பை அதிகாலை 2 மணியளவில் அல்லது அதற்க்கு முன்னர் அடையலாம்.

அல்லது அதிகாலை 3 அல்லது 4 மணியளவில்
   
       
   
  தொடங்கினால் பகல் 12 மணிக்கு முதல் எமது இடத்தை அடையலாம்.
அடிக்கடி தேநீர் அருந்த அல்லது wash room போக என வாகனத்தை நிறுத்தி செல்லுங்கள்.

இதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்புண்டு.

அத்துடன் திடீர் திடீர் என முளைக்கும்    புதிய van உரிமையாளர்களும் van சாரதிகளும். வெளிநாட்டில் இருந்து காசு வருமானால் எல்லாரும் யோசிக்கும் இலகு தொழில் இந்த வான் ஓட்டம். இதைவிட இது இப்பொழுத வெளிநாட்டுகாரனின் investment ஆக்கிவிட்டுது.

எனவே கொஞ்சம் சிந்தித்து பயண முடிவுகளை எடுங்கள். 🙏🙏🙏

இது ஒரு முகநூல் நண்பரின் பதிவு

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...