சிந்துவெளி நாகரீகமான "மொகஞ்சதாரோ"
என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர்களின் உயர்ந்த நாகரீகத்தை பறைசாற்றும் "வானிலை வட்டக்கல்"....!
காலம்:5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
பதிவில்,சிந்துவெளி மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட வானிலை வட்டக்கல் மற்றும் அங்குநடைமுறையில் இருந்த தமிழ்பெயர்கள் இன்று கூட வழக்கத்தில் பழமை மாறாது இருப்பது ஆச்சரியம்தான்..தற்போது அந்த இடம் அமைந்திருப்பது இன்றய "பாகிஸ்தான்"நாடு!
சிந்து வெளி நாகரீகத்தை பற்றி படித்தருப்போம்.மொகஞ்சதாரோ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் உயர்ந்த நாகரீகத்தை பறை சாற்றும் பல பொருட்கள் அண்மையிலும் கண்டுபிடிக்கப்பட்டன.அதில் ஒன்று ஒரு வட்டக்கல்.சிறுவர் உருட்டும் வண்டியின் சக்கரத்தைப் போன்று ,நடுவில் ஒரு பெரிய துளையுடன் உள்ளது.அதற்கு இரு பக்கங்ளிலும் இரு பள்ளங்கள் உண்டு.
முதலில்,இதை ஆராய்ந்த ஆராச்சியாளர்கள் இதை சிறுவர் விளையாடும் விளையாட்டுப் பொருள் என்று நினைத்து விட்டனர்.பின்புதான தெரிந்தது இதன் மதிப்பு என்ன என்பது...!!பின்பு இதை விபரமாக ஆராய்ந்த ஆய்வாளர்கள் அந்த இரு பள்ளங்களிலும்,இரண்டு குச்சிக்ளை செங்குத்தாக நட்டு சூரியனின் அன்றாட நகர்வுகளை துல்லியமாக கண்டரிந்து உள்ளனர் நம் முன்னோர்கள்.இதன் மூலம் அறிவியல் இல்லாத அந்தக் காலத்திலேயே உலகில் முதன் முதலில் "வானிலை கோட்பாட்டை"எவ்வாறு அறிந்து நடைமுறையில் பயன்படுத்தனர் என்பது தெரியவரும்.இதைக் கண்டு பிடித்தவர்கள் போலந்து நாட்டைச் சேர்ந்த அகழ்வாராச்சியாளர்கள்..!!
மேலும்,அதில் காணப்பட்ட 5 வரிசையான சிறிய பள்ளங்களிலும் குச்சிகளை நட்டு,ஆண்டின் பருவகாலங்களையும் கண்டறிந்துள்ளனர்."வானியல் பேசும் வட்டக்கற்கள்"இது தற்போது அழைக்கப்படுகிறது....
சிந்து சமவெளி தமிழர்கள் பயன்படுத்திய வட்டக்கற்களே தமிழ் நாட்டிலும் ஞாயிறின்(சூரியன்)அன்றாட ஓட்டத்தை அளக்க பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்வாடைப் புலவர் "நக்கீரர்"கூறும் இருகோல்குறிநிலை என்பது இதுபோன்றதொரு கருவியின் மூலம் கண்டறியப்பட்டது என்பது உண்மையே...
தமிழர்களின் வானிலை கோட்பாடு .....இன்றைய வானவியலின் முன்னோடி என்றால் மிகையாகாது....
வாழ்க தமிழ்...