Skip to main content

Posts

Showing posts from September, 2018

கொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கவனத்திற்கு! படித்து விட்டு Share பண்ணுங்கள!

Dolphins hires  Van இல் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள் நீங்கள்?                   உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள் 1. அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாரதி மட்டும் அல்ல, நீங்கள் எடுக்கும் சில அவசர தீர்மானங்களும் தான். அத்துடன் உங்கள் தீர்மானங்ககளை எடுக்கும் போது இதனால் வரும் பின் விளைவுகளை கொஞ்சமும் நீங்கள் சிந்திப்பதில்லை. 2. வாகனத்தை hire பண்ணும் போது வாகன சாரதி யார் என்று பாருங்கள் அத்துடன் இரவு நேர பயணம் என்றால் ஏற்கனவே அவர் இந்த ரூட் இல் இரவில் ஓடிய அனுபவம் உள்ளவரா ? அத்துடன் தொடர்ச்சியாக ஓடுபவரா என்று பாருங்கள். ஏனெனில் அனுபவம் உள்ளவர் தான் நித்திரை இல்லாமல் ஓடமுடியும். இதுதான் மிகமுக்கியமான ஒன்று. வான் condition ஐ விட driver  condition ஐ பார்க்க வேண்டும் 3. வாகனத்தை hire பண்ணுவார்கள் நீங்கள் அதனால் வாகன சாரதியை உங்கள் கட்டுப்பாடிற்குள் வைத்திருக்க வேண்டும். Driver சொல்லுவற்கெல்லாம் தலை ஆட்ட கூடாது. உதாரணமாக அவர் அடிக்கடி phone கதைப்பவராக இருந்தால் நாம் அதை கட்டுப்படுத்த அறிவுறு...

குட்டீஸ் கோபத்தை குறைப்பது எப்படி தெரியுமா? முழு விபரம் உள்ளே !!!ள

உங்களுக்கு கோபம் வருமா? குட்டீஸ். அம்மா, நீங்கள் கேட்ட பொம்மையை, சாக்லெட்டை வாங்கித் தராவிட்டால் கோபம் வந்துவிடுகிறதா? அம்மா கூப்பிட்டாலும் சத்தம் கொடுக்காமல் முகத்தை திருப்பிக் கொள்கிறீர்களா? கோபம் கொடியது என்பதை நீங்கள் அறிவீர்களா? கோபம் ஏன் வருகிறது? கோபத்தால் விளையும் தீமைகள் என்ன? கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அறிந்து கொள்ளலாம்… உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாக கோபம் வருகிறது. வெறுப்பு, வலி, பயம் ஆகியவையே கோபத்தின் வேர்களாக உள்ளன. ஆரம்பத்தில் எதிர்பார்ப்பின் காரணமாக வெறுப்பும்,                   வலியும் ஏற்படலாம். நம்பிக்கையின்மை, அறியாமை, சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயமும், கோபம் உருவாக காரணமாகலாம். நீங்களாக யோசித்துப் பார்த்தால் கோபத்தின் அடியில் இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு இருப்பதை உணரலாம். எதிர்பார்ப்பை குறைப்பதன் மூலம் வெறுப்பை தணிக்கலாம். வெறுப்பை கைவிட்டால் கோபமும், துன்பமும் பறந்துபோகும். குட்டீஸ்… சமர்த்துப் பிள்ளையான உங்களை, நீங்கள் ரொம்ப கோபப்படுவதாக மற்றவர்கள் கூறுவதுண்டா? கோபத்தால் உண்...

சிந்துவெளி மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட

சிந்துவெளி நாகரீகமான "மொகஞ்சதாரோ" என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர்களின் உயர்ந்த நாகரீகத்தை பறைசாற்றும் "வானிலை வட்டக்கல்"....! காலம்:5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பதிவில்,சிந்துவெளி மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட வானிலை வட்டக்கல் மற்றும் அங்குநடைமுறையில் இருந்த தமிழ்பெயர்கள் இன்று கூட வழக்கத்தில் பழமை மாறாது இருப்பது ஆச்சரியம்தான்..தற்போது அந்த இடம் அமைந்திருப்பது இன்றய "பாகிஸ்தான்"நாடு! சிந்து வெளி நாகரீகத்தை பற்றி படித்தருப்போம்.மொகஞ்சதாரோ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் உயர்ந்த நாகரீகத்தை பறை சாற்றும் பல பொருட்கள் அண்மையிலும் கண்டுபிடிக்கப்பட்டன.அதில் ஒன்று ஒரு வட்டக்கல்.சிறுவர் உருட்டும் வண்டியின் சக்கரத்தைப் போன்று ,நடுவில் ஒரு பெரிய துளையுடன் உள்ளது.அதற்கு இரு பக்கங்ளிலும் இரு பள்ளங்கள் உண்டு. முதலில்,இதை ஆராய்ந்த ஆராச்சியாளர்கள் இதை சிறுவர் விளையாடும் விளையாட்டுப் பொருள் என்று நினைத்து விட்டனர்.பின்புதான தெரிந்தது இதன் மதிப்பு என்ன என்பது...!!பின்பு இதை விபரமாக ஆராய்ந்த ஆய...

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்? அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள். அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல். 18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அதுபோல, வளி மண்டலத்த...

த்ரில்லர் படத்தில் -சிவகார்த்திகேயன்!!

சயின்ஸ் பிக்‌ஷன் மற்றும் காமெடி என்டெர்டெயினர் படங்களைத் தொடர்ந்து, த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். ‘சீமராஜா’ படத்துக்குப் பிறகு, ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஒரு படத்தை, எம்.ராஜேஷ் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில், ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. இன்னொரு படத்தை, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார். சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகும் இதில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடிக்கிறார். ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஷால், சமந்தா நடிப்பில் இந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன், அடுத்து சிவகார்த்திகேயனை இயக்கப் போகிறார். அடுத்த ஆண்டு தொடங்கப்படும் இந்தப் படம், த்ரில்லர் ...

பணக்காரரை (மட்டுமே) திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு..! முகேஷ் அம்பானி கொடுத்த பட்டாசு பதில்!

பூஜா என்ற  இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,  ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்றார். இந்தப்  பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில்.... “உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும். பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும் .  பொருளாதார பார்வையில் இதை க...