இன்று இந்த ராசிக்காரர்கள் புது முயற்சியில் ஈடுபடக் கூடாது...வழக்கமான பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்...!
தினம் தினம் திருநாளே!..
மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு.
அதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
மேஷம்
புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத விருந்தினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். பரணிநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.
ரிஷபம்:
இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். அரசாங்க வகையில் ஆகவேண்டிய காரியங்கள் அனுகூலமாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத உறவினர்கள் வருகை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ரோகிணிநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படும்.
மிதுனம்
சகோதரர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சுமாராகவே கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். திருவாதிரைநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
கடகம்:
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்
சிம்மம்:
இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். தேவையான அளவுக்குப் பணம் இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
கன்னி:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். அஸ்தம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.
துலாம்:
இன்று முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். மனதில் உற்சாகம் ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்:
இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். நிலம், மனை வாங்கும் முயற்சி நல்லமுறையில் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் உங்களை சோர்வு அடையச் செய்யும். திட்டமிட்டு அலைச்சலைக் குறைக்க முயற்சிக்கவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
தனுசு:
இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். பூராடம்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.
மகரம்:
இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவும் உண்டு. திருவோணம்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
கும்பம்:
இன்று செலவுகள் அதிகரிக்கும். அதனால் சிறிய அளவில் கடன் படவும் நேரும். அலுவலகத்தில் உங்கள் அனுபவ அறிவு பெரிதும் பாராட்டப்படும். வியாபாரத்தில் கூடுதல் முதலீடு செய்யவேண்டி இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைத்து உங்களுக்குப் பெருமை சேர்க்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
மீனம்:
மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.