Skip to main content

இன்னைக்கு யாருக்கெள்ளாம் சந்திராஷ்டமம்?... யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும் தெரியுமா?




உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். 

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்

மேஷம்: 

21 மார்ச் – 20 ஏப்ரல் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடைய ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டில் உள்ள பிள்ளைகளாலட பெருமைகள் வந்து சேரும். மனைவியின் வீட்டுவழியிலான உறவினர்களின் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பயணங்களின் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்:

ஏப்ரல் 20 - மே 20 வேலையால் உங்களுடைய அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களுக்கு உண்டாகும் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகயும் உங்களுக்கு மனக்கசப்பைத் தரும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த தொகைகள் கைக்கு வந்து சேர கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக மிதமான பச்சை நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் இருக்கும்.

மிதுனம்: 

22 மே – 21 ஜூன் வியாபாரங்களின் மூலமாக உங்களுக்கு பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஏற்பட்ட பல பிரச்னைகளும் நீங்கும். நீண்ட நாட்களாக நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியங்களை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிவர்த்தியாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்: 

22 ஜூன் - 22 ஜூலை எந்த கடினமான செயலையும் வெகு எளிதாக செய்து முடித்து விடுவீர்கள். பொருளாதார வளர்ச்சி மேம்படும். காதில் கிடைக்கும் சுப செய்திகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்

சிம்மம்: 

23 ஜூலை - 21 ஆகஸ்ட் அரசு தொடர்புடைய செயல்பாடுகளினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுய தொழில் செய்கின்றவர்கள் வேலையாட்களை அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரங்களில் போராடி பெரும் லாபம் ஈட்டுவீர்கள். பிறருக்கு உதவி செய்வது நல்லது தான். ஆனால் அதற்கு முன் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 9 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி: 

22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர் நீங்கள் திட்டமிட்ட செயல்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவு முறைகளில் உள்ள சகோதர சகோதரிகளின் மூலமாக உங்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான முடிவுள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய வாகனங்களை சர்வீஸ் செய்து, பழுது நீக்கி புதுசுபோல் வைத்திருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் சில பணிகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

துலாம்: 

24 செப்டம்பர்- 23 அக்டோபர் உங்களுடைய பழைய நண்பர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் உங்களுக்குப் போட்டிகள் அதிகரிக்கும். பயணங்களால் உங்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து சுப செய்திகள் வந்து சேரும். நெருங்கியவர்களின் விமர்சனங்களினால் மன வருத்தங்கள் உண்டாகும். சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பேசுகின்ற போது கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 

24 அக்டோபர்- 22 நவம்பர் குடும்பத்தில் உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். தொழிலில் போடப்படும் புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்களுடைய புதிய முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் வெற்றி கிடைக்கும். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு: 

23 நவம்பர்- 22 டிசம்பர் இன்றைய அலுவலகப் பணிகளை மிக விரைவாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சொத்து சம்பந்தப்பட்ட பாகப் பிரிவினைகளில் உங்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்களுடன் இருப்பவர்கள் உங்களுடைய குணம் அறிந்து செயல்படுவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மகரம்: 

23 டிசம்பர் - 20 ஜனவரி வாழ்க்கையின் தேவைகளை ஒவ்வொன்றாகப் பூா்த்தி செய்வீர்கள். மனதுக்குப் பிடித்த நபர்களால் வீண் விரயச் செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவர்களின் செயல்களைப் பற்றி தேவையில்லாமல் விமர்சிப்பதைத் தவிர்க்கவும். மனைவியினுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நண்பர்களின் மூலமாக தொழிலை விருத்தி செய்ய உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீல நிறமும் இருக்கும்.

கும்பம்: 

21 ஜனவரி- 19 பிப்ரவரி தொழில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிக்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிகளில் உள்ள தடைகளை தாண்டி, முன்னேற்றம் அடைவார்கள். கணவன், மனைவிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். நீங்கள் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். நீங்களே எதிர்பார்க்காத சில விஷயங்களால் மன மாற்றங்கள் உண்டாகும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்: 

20 பிப்ரவரி - 20 மார்ச் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். நீங்கள் மனதில் நினைத்த எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். பிறருக்கு செய்த உதவிகளால் வாழ்ககையில் மேன்மை உண்டாகும். பிள்ளைகளுடைய வழியில் சுப செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம்அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...