கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சிவக்குமார். இவர் அஜித்தை வைத்து ‘ரெட்டை ஜடை வயசு’ மற்றும் அர்ஜூன் நடித்த ‘ஆயுதபூஜை’ படங்களை இயக்கியவர். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது.
இரண்டு படங்களிலும் நடிகர் கவுண்டமணி காமெடி ரசிக்கும்படியாக இருக்கும். கமர்ஷியல் ரீதியாக ஹிட் அடித்த படங்களை இயக்கிய இவர், பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
சினிமாவைத் தாண்டி வேறு என்ன செய்துகொண்டிருந்தார் என்ற தகவல் பலருக்குத் தெரியவில்லை. இந்நிலையில், இன்று அவர் இயற்கை எய்தியுள்ளார். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அழுகிய நிலையில் உடல் கிடந்துள்ளது.
இதனால் இவரது மரணம் மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சினிமாவைத்துறையைச் சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.