Skip to main content

இன்று எதிர்பாராத தனலாபம் கிடைக்கப்போவது....இந்த ராசிக்காரர்களுக்கு தான்!

தினம் தினம் திருநாளே!..
மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு.
அதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
மேஷம்
புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். பரணிநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்
உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து நீங்கள் கேட்காமலேயே மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
மிதுனம்
அதிகாரிகளால் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். சுபநிகழ்ச்சிகள் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.
சிம்மம்
காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பிற்பகலுக்குமேல் தாய்வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பூரம்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.
கன்னி
தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
துலாம்
இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். குடும்பப் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.சுவாதிநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.
விருச்சிகம்
இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் தேவையறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அனுஷம்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
தனுசு
இன்று முயற்சி செய்யும் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு ஆறுதல் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பூராடம்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
மகரம்
இன்று உங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.
கும்பம்
உற்சாகமான நாள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். கனிவாகப் பேசி உங்கள் காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
மீனம்
இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உத்திரட்டாதிநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம். Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும். toe To Bar:...

ஷம்போக்கு பதிலா இதை தேய்ச்சாலே முடி தாறுமாறா வளருமாம்! பெண்களே உஷார்

எல்லாருக்கும் கடலை மாவு என்றாலே முகம் பளபளக்கும் சருமத்திற்கும் தான் என்று தெரியும். ஆனால் இந்த கடலை மாவை கொண்டு தலைமுடி வளர்ச்சியை தூண்டலாம். பயன்கள் சரும அழகைப் போலவே தலைமுடி பராமரிப்பிலும் கடலைமாவு பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்து கடலை மாவு அழகு பராமரிப்புக்கு என்றே பயன்பட்டு வருகிறது. இதிலுள்ள போஷாக்குகள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வலிமையான மற்றும் அடர்த்தியான பொலிவான கூந்தலை பரிசாக அளிக்கிறது. முடி வளர்ச்சி முடி உதிர்தலை தடுத்தல் கூந்தலை சுத்தமாக்குதல் கூந்தல் வறட்சியை போக்குதல் கூந்தலிலுள்ள சிக்கலை போக்குதல் இயற்கையான கண்டிஷனர் பொடுகை தவிர்த்தல் பொலிவான மற்றும் நீண்ட கூந்தலை அளித்தல் கூந்தல் நுனிப்பிளவை தடுத்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு கடலை மாவு மூலம் உங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.