பிக்பாஸ் முதல் சீசனில் சர்ச்சைகளால் பிரபலமானவர்கள் காயத்ரி மற்றும் ஜூலி. இவர்கள் இருவராலும் தான் வீடே கலை கட்டியது என்று கூறலாம்.
தற்போது இரண்டாவது சீசனில் பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லையென்றாலும் கடந்த வாரம் ஐஸ்வர்யாவால் பல சுவாரஸ்யங்கள் சண்டைகள் வீட்டில் ஏற்பட்டது.
இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு எந்த நிகழ்ச்சி என்று கண்டுபிடிங்க பார்ப்போம் என்று நெட்டிசன்களிடம் கேட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவர் பிக்பாஸ் சீசன் 2ல் ஒயில்டு கார்டு என்ட்ரியாக போகிறார். அதனால் தான் இப்படி சூசகமாக ட்விட்டியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பல ட்விட்கள் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகின்றனர். ஆனால் இது குறித்து அவர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.