பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை தினமும் உட்கொண்டு வந்தால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.இதில் மக்னெஸ், போஸ்போரோஸ், சோடியம், பொட்டாசியம், நிற்றதே, கால்சியம், ஜின்க் மற்றும் இரும்புசத்து நிறைந்துள்ளது.இப்பொழுது நாம் தினமும் பீட்ரூட் உண்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி காண்போம் நண்பர்களே.
1. அல்சர்
அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் அல்சர் குணமாகும் நண்பர்களே.
2. சிறுநீரக சுத்திகரிப்பு
பீட்ரூட் சாறுடன் வெள்ளரிக்காய் சாறினை கலந்து தினமும் குடித்து வந்தால் உங்களின் சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் அனைத்தும் ஆரோக்கியமான சிறுநீரகத்தினை பெற முடியும் நண்பர்களே.
3. மூல நோய்
மூல நோய் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டினை உட்கொண்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும் நண்பர்களே.
4. இரத்த சோகை
இரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டினை உட்கொண்டு வந்தால் இரத்த சோகை பிரச்சினை தீர்ந்து நீங்கள் சுறுசுறுப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
5. புற்றுநோயினை கட்டுப்படுத்தும்
பீட்ரூட்டில் அதிக ;அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உங்களுக்கு விரைவில் வயதாவதை குறைத்து ஆரோக்கியமாக இருக்க உதவும்.
6. இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் பீட்ரூட் சாற்றினை குடித்து வந்தால் உங்களின் இரத்த அழுத்தம் சரியாக இருக்கும். எனவே இரத்த அழுத்தத்தை சரி செய்ய தினமும் பீட்ரூட் சாற்றினை குடித்து வரவும்.
7.சிவப்பணுக்களை அதிகரிக்கும்
பீட்ரூட் சாற்றினை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடம்பில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்கும். எனவே உங்கள் உடம்பில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க தினமும் பீட்ரூட் சாற்றினை குடித்து வரவும்