என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.
கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..
கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில்
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..
கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..
இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..
இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..
கவியுலகின் மன்னவனாய்
எங்கள்
மன்னவன் கந்தப்பு
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..
சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..
தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..
இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவர்கள்
பிறந்த ஊர் என் ஊர்..
பட்டிமன்ற பேச்சுக்களால்
மேடைகளை
அதிரவைத்த பொன் கணேசன்
இடிமுழக்கம் நடேசு
உணர்சிமிகு பேச்சாளர் மெய்யரசன்
அறிவு பேச்சாளர் லீலாரட்ணம்
இப்படி எத்தனை எத்தனை
பேச்சாளர்கள்..
தமிழ்த் தாய் பெற்றெடுத்த
தவப் புதல்வன்
முதுபெரும் இலக்கியவாதி..
எங்கள் பேராசிரியர் சிவத்தம்பி
பிறந்ததும் எங்களூரே..
நாடக.. உலகின்
சிம்ம சொப்பனம்
எங்கள் அருள் அண்ணன்
கூத்துக் கலையின் முன்னோடிகள்
கிருஸ்ணாழ்வார்.. ஏகன் சின்னத்தம்பி
போன்றோரும் எங்களூரே..
தனி நடிப்பால்
புகழ் சேர்த்த பாலச்சந்திரனும்
தம்பர் மார்க்கண்டுவும்
எம் ஊரின் பெருமை அன்றோ..
கதை உலகின் நாயகர்களாய்
கரவைக்கதிர்., றஞ்சகுமார்
கணமகேஸ்வரன்.. நெல்லை க பேரன்
தெணியான் கருணையோகன்
கரவை மு தயாளன்
பட்டியல் நீளுகின்ற
எங்கள் ஊர்..
தூய்மை.. எளிமை மிகு
அரசியல் ஆளுமைகளாய்
வலம் வந்த
சிவசிதம்பரம்.. ஜெயக்கொடி.. கந்தையா
இராசலிங்கம்..
அரசியல் செய்த
பெருமை மிகு ஊர்
எங்கள் கரவெட்டி..
பத்திரிகைத் துறையில்
கேலிச் சித்திரங்கள் மூலம்
புதுமை செய்த
சிரித்திரன் சுந்தரின்
ஆளுமையை
என்னவென்பேன்..
பத்திரிகைத் துறையில்
சிகரம் தொட்ட
வீரகத்தி தனபாலுவும் ( வீ.த)
எங்கள் ஊரின்
சொத்து அன்றோ..
இன்னும்
நான் அறியாப் பல விடயங்கள்
இருக்கும்
அதை அறிந்தும்
எங்கள் ஊரின்
பெருமை சொல்வேன்...
நாற் புறமும்
வயல் சூழ
இயற்கை அழகு கொஞ்சும்
எங்கள் கரவெட்டி மண்ணில்
பிறந்தது
எனக்கும் பெருமை...
என் நெஞ்சை
நிமிர்த்திச் சொல்கிறேன்
நான்
கரவெட்டியான் என்று..
எங்கள் கரவெட்டி மண்ணே
நீ... வாழி.. வாழி..
வறுத்த மக்காச் சோளம் அல்லது பூட்டா அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகவும் இருக்கிறது. இருப்பினும், இதை உண்டவுடன் குடிநீரை உடனடியாக குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுமாம். நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இரைப்பைப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலிக்கும் இது வழிவகுக்கும். ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது? தண்ணீருடன் மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒன்றாக உட்கொள்ளும் போது பலர் வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாக புகார் செய்துள்ளனர். சோளக்கருது உண்டவுடன் குடிநீரை குடிப்பதன் மூலம் ஜீரண நொதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றமடைகின்றன எனவே செரிமான வேகம் குறைகிறது. சோளக்கருதில் உள்ள சிக்கலான கார்ப்ஸ் , ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் வாய்வு , அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உருவாகும் என டாக்டர் அஷுடோஷ் கூறுகிறார். எவ்வளவு நுரம் கழித்து குடிக்கலாம்? சிறந்த நேர இடைவெளி, குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர, எலு...