இந்திய மாநிலமான தமிழகத்தில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.
துறையூரை அடுத்த நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் வளர்த்த ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றது.
அதில் ஒரு குட்டி பாதி மனித உருவத்திலும், பாதி மிருக உருவத்திலும் உள்ளது. ஆனால் பிறந்த சில நிமிடங்களில் அந்த ஆட்டுக்குட்டி உயிரிழந்தது. இதை கண்ட அந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து ஆய்வு செய்ய அரசு தரப்பிலிருந்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் சென்றனர். பின்னர் ஆய்வு செய்ததில் கரு முழு உருப்பெறாததே இதற்கு காரணம் என கால்நடை மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.