வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய காதலி முடிவெடுத்ததால் பட்டதாரி மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறான். இன்னும் யாரும் இந்தப் பிரச்சனையை பெரியளவில் பேசத் தொடங்கவில்லை. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ஈழத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறி வருகிறார்கள். விரைவில் யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அடி விழும் என்று எதிர்பார்க்கிறேன். நான் தாயகத்திற்கு சென்ற பொழுது உறவுக்கார இளைஞன் ஒருவன் கேட்டான்… ‘நாங்கள் காதலிக்கின்ற பெண்களை வெளிநாட்டில் இருந்து வந்து தூக்கிக் கொண்டு போகின்றார்கள்! இது நியாயமா?’ நான் சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்.. ‘தம்பி…. திரைப்படங்களில்தான் நீங்கள் ஹீரோ, வெளிநாட்டு மாப்பிள்ளை கடைசியில் வந்து தியாகம் செய்து விட்டு போவான், அல்லது அடிவாங்கி ஓடுவான், ஆனால் உண்மையான வாழ்க்கையில் நாங்கள்தான் ஹீரோ, கடைசிக் கட்டத்தில் வந்து நீங்கள் காதலிக்கும் பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடுவோம்’ என் எகத்தாளத்தை அவன் ரசிக்கவில்லை. தலையைக் குனிந்து கொண்டு சோகமாக நின்றான். அங்கே இருக்கின்ற பெரும்பாலா...
இலங்கையின் யாழ் மாவட்டத்தின் வடமராட்சி பெருநிலப்பரப்பில் அமைந்துள்ளது கரவெட்டி என்னும் அழகிய ஊர்! Karaveddy nelliyady jaffna thachchanthoppu pillaiyar