Skip to main content

Posts

Showing posts from November, 2018

அது ஒரு கனாக் காலம்! கரவெட்டியில் ஒரு மதவு!

அது ஒரு கனாக் காலம்! கரவெட்டியில் ஒரு மதவு இருந்தது அது மதவடி என்று பெயர் பெற்று இருந்தது அதில் நிறைய இளைஞர் கூட்டம் இருந்தது அவர்கள் சிரித்து மகிழ்ந்திட்ட ஒரு காலம் இருந்தது சோனப்பு வீதியில் அந்த மதவடி இருந்தது மதவடியில் குந்தி இருந்து பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் ஒன்று எப்போதும் இருந்து வந்ததே ஒரு வீட்டில் விசேடம் என்றால் பலகாரப் பெட்டி மதவடி வந்திடுமே ஒரு வீட்டில் ஓலம் கேட்டால் ஒடி வரப் பலர் இருந்தனரே மதவடியில் அருகில் அத்துளு வயல் இருந்தது அதன் நடுவே ஒரு குளம் இருந்தது குளம் நிறைய தாமரை மலர்ந்தது நீச்சல் பழகும் சிறுசுகளாலும் குளம் கலங்கியும் நிரம்பியும் இருந்தது. அங்கும் பல சாதிகள் இருந்தன ஆனால் அதையும் தாண்டி அன்பு இருந்தது பல மதங்கள் இருந்தன ஒருபோதும் வேறுபாடு காட்டியதில்லை பல இயக்கத்தையும் சேர்ந்தவர் இருந்தனர் உன் இயக்கம் பெரிது என் இயக்கம் பெரிது என்றதொரு சண்டை நடந்ததில்லையே மதவடி அருகெங்கும் மதில்களும் வேலிகளும் இருந்தன ஆனாலும் ஆர்மி வந்தால் ஓடி தப்பிச் செல்ல அதில் இடைவெளிகளும் கண்டாயங்களும் இருந்தன மட்டக்களப்பில் இருந்து வந்த பொடியன்களும் மன்னாரில் இருந்து வந்த பொடியன்களும...